ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: சம்பள வருமானத்தை வைத்து மட்டுமே ஓபிசி பிரிவினரை வசதி படைத்தவர் என முடிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஓபிசி மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து பாதுகாக்கிறது எனவும், ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் நீதிபதி ஆர் மகாதேவன் அமர்வு விசாரித்தது. அப்போது, சம்பள வருமானத்தை வைத்து மட்டுமே ஓபிசி பிரிவினரை வசதி படைத்தவர் என முடிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஓபிசி பிரிவினருக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஏனெனில், கிரீமிலேயர் பிரிவில் அவர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக கூறி பணி நியமனம் மறுக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் சம்பள வருமானத்தை ஒப்பிடகூடாது எனக்கூறி, சென்னை, டெல்லி, கேரளா ஆகிய மாநில ஐகோர்ட்கள், ஓபிசி பிரிவினருக்கு ஆதரவாக தந்த தீர்ப்புகளை உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
நியாயமான உரிமைகள் கிடைக்கும்
ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி.. ஓபிசி கிரீமி லேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இத்தீர்ப்பானது, கிரீமிலேயர் நிர்ணயத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளது.
ஓபிசி மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து பாதுகாக்கிறது. குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தகுதி வரையறை தொடர்பான உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உறுதிசெய்துள்ளது. பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகளில் ஓபிசி மக்களுக்கு எதிராக இருந்த பாகுபாட்டை நிராகரித்திருக்கிறது. இட ஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனும் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
நிரப்பப்படாமல் உள்ளன
எனினும், இந்த வழக்கில் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினர் பலரின் நியாயமான உரிமையை மறுக்கும் நிலைப்பாட்டை NDA அரசு எடுத்து வாதாடியது. அது மட்டுமில்லாமல், முன்னேறிய வகுப்பினருக்கான பொருளாதார ரீதியான EWS இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த வரையறையை மீறியது.
மண்டல் குழு அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து முப்பது ஆண்டுகளாகியும், நாட்டின் பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒன்றிய அரசுப் பணிகளிலும் பல ஓபிசி பணியிடங்கள் இன்றும் நிரப்பப்படாமலே உள்ளன.
அநீதிக்குத் தீர்வு காண வேண்டும்
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்தியத் தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தது உள்ளிட்ட பலவற்றிலும் தி.மு.கழகம் சமூகநீதிக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. சமூகநீதிக்கான நம் போராட்டம் தொடரும்!
ஏற்கெனவே குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் தங்களுக்கான இடங்கள் மறுக்கப்பட்ட ஓபிசி தேர்வாளர்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, அரசியலமைப்பின் சமத்துவ நெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
-
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications