ம்ஹூம்.. சரியில்லையே.. குண்டாகும் இந்தியர்கள்.. குண்டை தூக்கி போட்ட ஆய்வு.. மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் உடல் பருமன் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
சென்னை: நம் நாட்டில், உடல் பருமன் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், இந்த 4 வருடங்களில் மட்டும், சராசரியாக பெண்களின் உடல் பருமன் 3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் பகீர் ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம்... நமது உடலின் இயக்கம், உழைப்புக்கு தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது.
ஆனால் உணவை அளவுக்கு மீறி எடுத்து கொள்ளும்போது, அது கொழுப்பாக மாறி உடலில் அப்படியே தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.

உடல் எடை
அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதாலும், ஒருநாளில் பல வேளை சாப்பிடுவதாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு, உடனேயே படுத்து தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.. உணவை அதிகமாக உட்கொள்வது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுவது உண்டு.

மத்திய அரசு
அந்த வகையில் இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை தீராத ஒன்றாக உள்ளது.. இந்நிலையில், குடும்பங்களின் சுகாதார நிலை குறித்த ஐந்தாவது கள ஆய்வின் தரவுகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது... அந்த ஆய்வில் உள்ளதாவது: " இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசிய அளவில், கடந்த நான்கு ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19ல் இருந்து 23 சதவீதம் ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 21ல் இருந்து 24 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது

கர்ப்பம்
குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் 38 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக குறைந்திருக்கிறது... இது நாட்டிலேயே அதிகபட்சமாக மேகாலயாவில் 47 சதவீதமாகவும் குறைந்தபட்சமாக புதுச்சேரியில் 20 சதவீதமாகவும் உள்ளது. மேலும், பெண்கள் கருவுறுதலும் குறைந்துள்ளது. கேரளா, அந்தமான், ஆந்திரா, கோவா, சிக்கிம், மணிப்பூர், டெல்லி, தமிழகம், புதுச்சேரி, பஞ்சாப், சண்டிகர் மற்றும் லட்சத்தீவில் 3ல் ஒரு பங்குக்கும் மேலான பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருவுருதல்
4 வருடங்களுக்கு முன்பு, பெண்களின் சராசரி குழந்தைகள் பிறப்பு விகிதம் 2 புள்ளி ஒன்றாக இருந்த நிலையில், தற்போது அது 2 புள்ளி பூஜ்யமாக குறைந்துள்ளது. அதேசமயம், அதிகபட்சமாக கருவுருதல் விகிதம் பீஹாரில் 2.98 சதவீதமாகவும், மேகாலயாவில் 2.91 சதவீதம் ஆகவும், உத்தரபிரதேசத்தில் 2.35 சதவீதமாகவும், ஜார்கண்டில் 2.26 சதவீதமாகவும், மணிப்பூரில் 2.17 சதவீதமாகவும் உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications