முன்பு எச்சில்கூட முழுங்க முடியாது.. இப்போ கூழ் குடிக்கிறேன்.. தன்னம்பிக்கையுடன் நடிகர் தவசி
சென்னை: முன்பு எச்சில் கூட முழுங்க முடியாமல் இருந்த நிலையில் இப்போது கூழ் குடிக்க முடிகிறது, உடல் தெம்பாக இருக்கிறது என நடிகர் தவசி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தவசி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர்.
இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானார். கம்பீர தோற்றத்தாலும் பெரிய முறுக்கு மீசையாலும் புகழ்பெற்ற இவர் கருப்பன் குசும்புக்காரன் என பேசும் வசனம் பிரபலமாகும். அத்துடன் இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்று வரை பயன்படுத்தி வருகிறார்கள்.

அண்ணாத்த படம்
கிழக்கு சீமையிலே முதல் ரஜினியின் அண்ணாத்த வரை நடித்து வருகிறார் தவசி. இவர் தற்போது உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்படுகிறார். எலும்பும் தோலுமாய் அடையாளமே தெரியாமல் காட்சியளிக்கும் தவசி தனது குடும்பத்தினருக்கு நடிகர் நடிகைகளும் தமிழக அரசும் உதவி செய்ய உருக்கமாக கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.

திரையில் தோன்ற
இவருக்கு திமுக எம்எல்ஏ சரவணன் தனது சொந்த செலவில் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளார். இதற்காக அவர் தனது சரவணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம். இவர் மீண்டும் பழையபடி திரையில் தோன்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டியூப்
இதுகுறித்து நடிகர் தவசி கூறுகையில் புற்றுநோயால் என்னால் எச்சில் கூட விழுங்க முடியாத நிலையில் இருந்தேன். தற்போது டாக்டர் சரவணின் சிகிச்சையால் தெம்பாக இருக்கிறேன். கூழ் குடிக்க முடிகிறது. விரைவில் பழைய நிலை திரும்பும் என கருதுகிறேன். தொண்டையில் டியூப் பொருத்தியுள்ளார்கள் என்றார்.

திரையில் தோன்ற வேண்டும்
இதுகுறித்து அவரது மனைவி அங்கம்மாள் கூறுகையில் எனது கணவரை கம்பீரமாக பார்த்துவிட்டு இப்போது இந்த நோயினால் இப்படி பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த நோயிலிருந்து கடவுள் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அவர் மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications