ஒரு பக்கம் ஆபாச சைட்டுகள்.. இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்புகள்.. இது சரியா.. என்ன செய்ய போகிறோம்?!
சென்னை: "ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்யாமல், பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவது சரியா?" என்று மிக முக்கியமான பிரச்சனை ஒன்றை ராஜேஸ்வரி பிரியா முன்வைத்துள்ளார்.
Recommended Video
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா... இவர் சமீபத்தில்தான் இக்கட்சியை ஆரம்பித்தாலும், சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து வருகிறார்.. அந்த வகையில், அறிக்கை மூலம் வேண்டுகோள் ஒன்றை நேற்று விடுத்துள்ளார்.
அதில், "தற்போது ஆன்-லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சனை ஆபாச இணையத்தளங்கள் தடை செய்யப்படாமல் ஆன்-லைன் வகுப்பு நடத்தப்படுவது... அதனால் மாணவர்கள் தடம் மாற வாய்ப்பு உள்ளது.

கட்டணம்
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆன்-லைன் கல்வி இன்று நடைமுறையில் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. தேனியில் ஆன்-லைன் வகுப்பு புரியவில்லை என்று 10ஆம் வகுப்பு மாணவன் அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.

கல்வி
தொலைக்காட்சி வழியாக தனியார் பள்ளிகளும் பாடங்கள் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக ஆன்-லைன் கல்வி தடை செய்யப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் கல்வியை மட்டும் சார்ந்தது அல்ல. ஒழுக்கத்தையும் சார்ந்தது" என்று கூறியுள்ளார்.

ஸ்மார்ட் போன்
இந்த விஷயத்தை 2 வகையில் அணுக வேண்டி உள்ளது.. ஒன்று மாணவர்களின் மனநலம் சார்ந்த பிரச்சனை.. மற்றொன்று பொருளாதாரம் சார்ந்த பிரச்சனை. பொருளாதார ரீதியாக இதை அணுகினால், கையில் ஸ்மார்ட் போன் இல்லாதால், பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.. இதனை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து விட முடியாது.

ஏழை மாணவர்கள்
எத்தனையோ கிராமப்புறங்களில், தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கஷ்டப்பட்டு ஏழைகள் படிக்க வைத்து வருகின்றனர் இவர்களுக்கு ஃபீஸ் கட்டுவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில், எல்லார் வீடுகளிலும் ஸ்மார்ட் போன் இருக்குமா? படிக்கிற பிள்ளைகள் கையில் அவைகளை வாங்கி தர பெற்றோரால் முடியுமா என்பது கேள்விக்குறிதான்... ஸ்மார்ட் போன் இருந்தால்தான் ஆன்லைன் கிளாஸில் பங்கெடுக்க முடியும்.. அப்படி இருக்கும்போது, ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு இந்த கிளாஸ்களில் பலனும் இருக்காது..

கூடுதல் அக்கறை
அதுமட்டுமில்லை, ஸ்மார்ட் போன் இல்லாத பிள்ளைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விடுகிறது.. சின்ன வயசு பிள்ளைகளால் மற்ற சக நண்பர்களிடம் அவமானமடைவதாக கருதி கொள்கின்றனர்.. அதனால், இந்த ஆன்லைன் கிளாஸ் உட்பட மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பாக உளள்து.

ஆபாச சைட்டுகள்
மற்றொன்று ராஜேஸ்வரி பிரியா சொல்வதுபோல், ஆபாச வெப்சைட்களுக்கு தடை விதிக்காமல், ஆன் லைன் கிளாஸ் நடத்தினால் மாணவர்கள் தடம் மாற வழி வகுக்க செய்யும் என்பதையும் மறுக்க முடியாது. கடந்த வருடம் ஏடிஜிபி ரவி, ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.. ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான்... 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

பெண் குழந்தைகள்
உண்மையிலேயே இந்த அறிவிப்பு நல்ல பலனை தந்தது.. இன்டர்நெட்களில் ஆபாச படம் பார்ப்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது... அதுமட்டுமில்லை.. யாரெல்லாம் ஆபாச படத்தை டவுன்லோடு செய்தார்களோ, அவர்களே அதை நீக்கவும் ஆரம்பித்தனர்.. ஆனால், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக போலீசாரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே என்றாலும், "ஆபாச வெப்சைட்டுகளை நீக்கி விடுவதை விட்டு விட்டு.. இப்படி பார்க்கிறவங்களை அரஸ்ட் பண்ணுணா எப்படி?" என்ற கேள்வி எழவே செய்கிறது.

இணையதளம்
"தெருவுல போவாங்களாம், ஆனா யாரும் பாக்ககூடாது, பார்த்தா கேஸ் போடுவோம் என்பது போல் இது இருக்கிறதே" என்று சிலர் கேட்கும் கேள்வியும் நியாயமானதாகவே இருக்கிறது.. இணையத்தில் எதற்காக இத்தனை ஆபாச வெப்சைட்டுகள் உள்ளன? ஏன் அனைத்து தேவையற்றவைகளையும் களைய கூடாது?

தடை விதிக்க வேண்டும்
இனி மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்தான் என்று முடிவாகிவிட்டால் அவர்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்போது, நிச்சயம் அவர்கள் தடம் மாற வாய்ப்புகளும் நிறைய உள்ளன. பெற்றோர்களும் எந்நேரமும் இதை கண்காணித்து கொண்டிருக்க முடியாது. எனவே சிதறி கிடக்கும் ஆபாசங்களை ஒழிக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பிள்ளைகள் தடம் மாறாமல் இருப்பார்கள்!
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications