சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுமா? வேகமாக குறையும் ஏரிகளின் நீர் மட்டம்.. அதிகாரிகள் விளக்கம்
சென்னை: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், சென்னையில் வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.. ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் பஞ்சம் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்..
சென்னையில் பொதுவாக கோடைக்காலங்களில் வெயில் அதிகமாக இருக்கும்..நிலத்தடி நீரை நம்பி இருப்போர் முதலில் பாதிக்கப்படுவார்கள். அதேநேரம் குழாய்களில் வரும் குடிநீரைத்தான் அப்போது மக்கள் வெகுவாக நம்பி இருப்பார்கள்.. மேலும் குழாய் இணைப்பு இல்லாத பகுதி மக்கள் லாரி தண்ணீரையே நம்பி இருப்பார்கள். இதுதான் வழக்கம்.

பொதுவாக நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தால், சென்னைக்கு அடுத்து வரும் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வராது.. அந்த வகையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையாக நிறைந்தது. இதன் உபரி நீர் ஊருக்குள் வந்து வெள்ளக்காடானது. 2015ஐ விடவும் அதிகமான பாதிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டது.
இப்படியான மழை பெய்த காரணத்தால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில் நீர்மட்டம், வெயில் காரணமாக வேகமாக குறைந்து வருகிறது.
இது ஒருபுறம் எனில், கடலூர் மாவட்டம் வீராணம் ஏர் நீர் இன்றி வறண்டு போய் விட்டது. சென்னையை பொறுத்தவரை செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண் ஆகிய ஏரிகளில் தண்ணீர் கொள்ளவு என்பது 13.22 டி.எம்.சி ஆகும். இந்த 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 8.4 டி.எம்.சி மட்டுமே தற்போது இருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டை விட 1½ டி.எம்.சி. குறைவாகவே தண்ணீர் இருக்கிறது.
தற்போது தினசரி குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 15 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 141 கன அடியும், பூண்டி ஏரியில் இருந்து 303 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 546 கன அடியும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களான மீஞ்சூரில் இருந்து 34.41 மில்லியன் லிட்டர், நெம்மேலி பழையது 72.64 மில்லியன் லிட்டர், புதியதில் 85.38 மில்லியன் லிட்டர் நீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பல வீடுகளில் சரிந்து வருகிறது. இதுஒருபுறம் எனில் குடிநீரின் தேவையும் நாளுக்கு நாள் முன்பைவிட அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த அதிகாரிகள், சென்னை மாநகருக்கு அடுத்த 8 மாதத்துக்கு தேவையான குடிநீர் இருக்கிறது. அச்சப்பட தேவையில்லை என்றார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications