ரேஷன் கடை பாமாயில்.. தமிழ்நாடு முழுக்க பறந்த உத்தரவு.. நியாய விலை கடைகளில் அவசர மூவ்.. என்னாச்சு?
சென்னை: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இது நிம்மதியைத் தரக்கூடும் என்றாலும்.. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்தியாவில் பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரக்கூடும்.
இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளில் பாமாயில் ஸ்டாக்கை உறுதி செய்ய கடை ஊழியர்களுக்கு உத்தரவு சென்றுள்ளதாம். அதாவது போதுமான எண்ணெய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு சென்றுள்ளதாம். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் மீண்டும் ஸ்டாக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. 10 சதவிகித கடைகளில் மட்டுமே தற்போது தட்டுப்பாடு உள்ளது. விரைவில் அதுவும் சரி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பின்படி, சமையல் எண்ணெய், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி 12.5% லிருந்து 32.5% ஆகவும் அதிகரிக்கும்.
கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மீதான பயனுள்ள வரி முறையே 5.5% லிருந்து 27.5% ஆகவும், 13.75% முதல் 35.75% ஆகவும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்கள், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்தியாவில் லேபிள் மட்டும் ஓட்டி விற்கப்படும் எண்ணெய்கள் விலை உயரும்.
ஹோட்டல்களில் உணவு விலை: இதன் காரணமாக முக்கியமாக ஹோட்டல்களில் உணவு விலை புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டல்களில்... முக்கியமாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இப்படி பொருட்களின் விலை உயர்வதால் ஸ்வீட், உணவு பதார்த்தங்களின் விலையும் புதிய உச்சத்தையும் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் விலை உயர்வு: ஏற்கனவே வெளியான பொருளாதார ஆய்வு 2024 அறிக்கையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (சிஎஃப்பிஐ) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் கடந்த 2022 நிதியாண்டில் 3.8 சதவீதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது..
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications