பைக் டாக்சிக்கு தடை உள்பட 13 கோரிக்கை.. ஓலா, உபேர் ஓட்டுநர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்.. பயணிகள் சிரமம்
சென்னை: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஒலா, உபேர் கார் ஓட்டுநர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, உபேர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் பீக் நேரங்களில் வாடகை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுவதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதேபோல், பயணிகளின் புக்கிங்கை கார் டிரைவர்களுக்கு அலாட் செய்யும் இந்த நிறுவனங்கள் அதற்காக குறிப்பிட்ட அளவு கமிஷன் தொகையும் எடுத்துக்கொள்கிறது. இதுபோக தற்போது பைக் டாக்சிகளையும் ஓலா, ரேபிடோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. இதனால் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16ம் தேதி முதல் 2 நாட்களுக்கு செயலியை நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஓலா, உபேர் ஓட்டுநர்கள் அறிவித்து இருந்தனர். இதன்படி, சென்னையில் நேற்று ஒலா, உபேர் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த ஓலா, உபேர் போன்ற செயலிகளில் புக் செய்து பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஏனெனில் வழக்கமாக சில நிமிடங்களில் புக்கிங் ஆகிவிடும் சூழலில் நேற்று பல நிமிடங்கள் பயணிகள் காத்திருந்து புக் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை புக் செய்ய முயற்சித்தும் புக்கிங் ஆகவில்லை என்றும் பயணிகள் சிலர் ஆதங்கத்தை தெரிவித்து இருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பயணிகள் பலரும் தங்கள் சிரமத்தை பதிவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தான் ஓலா, உபேர் கார் ஓட்டுநர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. மதுரை, திருச்சி, கோவையில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த ஓலா, உபேர் ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ஓலா, உபேர் ஓட்டுநர்கள் குறித்து உரிமைக் குரல் ஓட்டுனர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் உசைன் கூறுகையில்,
ஓலா, உபேர் செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதேபோல், ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்.
சொந்த வாகனங்களை வாடகைக்கு அனுப்பினால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரமாக்க வேண்டும். வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற போக்குவரத்து துறை அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக கூறியிருந்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications