வெறும் 20 கி.மீ. தூரத்திற்கு 1000 ரூபாயா? ஷாக்காகும் ஓலா, ஊபர் கால் டாக்ஸி பயணிகள்!
சென்னை: ஓலா , ஊபர் கால் டாக்ஸி நிறுவனங்கள் சென்னையில் 20 கி.மீ. தூரம் பயணித்த வாடிக்கையாளரிடம் ரூ 1000 வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓலா, ஊபர் செயலிகள் மூலம் கார், ஆட்டோக்களை புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை பெருகி விட்டது. வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓலா, ஊபர் டிரைவர்கள் நேற்று முன் தினம் முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுநர்கள் தங்களது போனில் இருந்து செயலியை நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக அவர்களுடைய போராட்டம் நடந்தது. மதுரை, திருச்சி, கோவையிலும் இவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வர் என ஓலா, ஊபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் செயலியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் குறைந்த அளவிலான ஓட்டுநர்களே வாகனங்களை இயக்கி வருகிறார்கள். எனவே கட்டணம் அதிகளவில் உயர்ந்துள்ளது.
சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு முன்பு 20 கி.மீ. தூரத்தை கடக்க ரூ 400 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று ரூ 1200 முதல் 1400 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. தற்போது 2 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர், கால் டாக்சி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications