சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓலா, ஸ்விக்கி, இன்னும் பல நிறுவனங்கள்.. கொரோனா அலைக்கு இடையே.. தொழிலை காப்பாற்றுகிறதே எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோய்த்தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில்களில் வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களான ஸ்விக்கி, சொமொட்டோ போன்றவையும் அடங்கும்.

Recommended Video

    Zomato-வுக்கான Investment-ஐ நிறுத்திய China | Boycott China | Oneindia Tamil

    இந்த பாதிப்பில் இருந்து மீண்டு தங்கள் நிறுவனத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பல்வேறு யுக்திகளை அந்த நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. ஒரு கடினமான காலகட்டத்தில், இருந்து எப்படி மீள்வது என்பது தொடர்பான ஒரு படிப்பினையை இந்த நிறுவனங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திர நாளை கொண்டாட உள்ள நிலையில், தொற்று நோயிலிருந்து இந்திய நிறுவனங்கள் எவ்வாறு, தொற்று நோயிலிருந்து போராடி சுதந்திரம் பெற்று தங்களின் நிலைநிறுத்தி கொண்டன என்று பார்க்கலாமா:

    திருவனந்தபுரத்தில் இன்று முதல் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல் திருவனந்தபுரத்தில் இன்று முதல் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல்

    ஸ்விக்கி பயிற்சி

    ஸ்விக்கி பயிற்சி

    ஸ்விக்கி மற்றும் சொமொட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு போதிய அளவுக்கு பயிற்சிகளை கொடுத்து வருகின்றன. சுகாதாரமான முறையில் உணவு வினியோகம் செய்வது எப்படி என்பது பற்றி அவ்வப்போது அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேபோன்று இவர்கள் உணவு பொருட்களை வாங்கக் கூடிய உணவகங்களும் சுகாதாரத்தை பேணுகின்றனவா என்பதை உறுதி செய்கின்றனர்.

    ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

    ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

    உணவு கொண்டு வரக்கூடிய ஊழியர் யார்? அவருக்கு எப்போது காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது? காய்ச்சல் பரிசோதனையில் அவருக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய தகவல்களையும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அனுப்புகிறார்கள். காய்ச்சல் மாத்திரை போட்டுக்கொண்டு பரிசோதனைக்கு உட்படக் கூடாது. அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு விநியோக ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்கள் எச்சரிக்கை பிறப்பிக்க தவறவில்லை.

    தொடுதல் கிடையாது

    தொடுதல் கிடையாது

    டோமினோஸ், மெக்டொனால்ட் போன்ற உணவு வழங்கும் நிறுவனங்கள், 'பூஜ்ஜியம் தொடர்பு' உணவு சப்ளை சேவை என்பதை அறிமுகம் செய்துள்ளன. உணவு வழங்கும் ஊழியர், வீட்டு வாசலில்தான் சாப்பாடு பொட்டலத்தை வைத்துவிடுவார்கள். வாடிக்கையாளர்களிடம் நேரடியாக கொடுப்பது கிடையாது.

    டிஜிட்டல் பணப் பரிமாற்றம்

    டிஜிட்டல் பணப் பரிமாற்றம்

    பிக்பாஸ்கெட், பிளிப்காார்ட் போன்ற பொருள் விநியோக நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கின்றன. நேரடியாக பணத்தை கையால் பெறுவது கிடையாது. ஓலோ, ஊபர் போன்ற தனியார் டாக்சி சேவைகளில் மக்கள் இப்போதெல்லாம் அதிகம் பயணிப்பது கிடையாது என்பதால், கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு, ஊபர் மற்றும் ஓலோ ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஊபர் பயணிகள் மற்றும் டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் அவை வகுத்துள்ளன.

    English summary
    Facing severe business loss due to the nationwide lockdown, top ride-hailing, food delivery and hospitality companies, as well as mid-stage startups are scrambling to spread awareness against the disease and protect their employees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X