மாமா மாமா என் மக்கு மாமா.. அட அட.. என்னா வரிகள்.. என்னா கோர்வை..அசத்தும் கொல்லங்குடி கருப்பாயி!
Recommended Video
சென்னை: இந்த வயதிலும் தனது தனித்துவமான குரலால் அட்டகாசமான நாட்டுப்புற பாடலை பாடி அசத்தியிருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி.
நாட்டுப்புற பாடகியான கொல்லங்குடி கருப்பாயி மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி பகுதியை சேர்ந்தவர். குழந்தை பருவத்திலேயே நாட்டுப்புற பாடல்களை பாட தொடங்கிய கொல்லங்குடி கருப்பாயி, 30 ஆண்டு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளார்..
இவரை ஆண்பாவம் என்ற படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் ஒரு வயது முதிர்ந்த நடிகையாக கொல்லங்குடி கருப்பாயியை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாண்டியராஜன்.

ஆண்பாவம்
ஆண்பாவத்தை தொடர்ந்து ஆயுசு நூறு, கோபாலா கோபாலா உள்ளிட்ட படங்களில் நடித்தார் அவர். ஆண்பாவம் படத்தில் மட்டும் 5 பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி.

ரெக்கார்டிங்
ரெக்கார்டிங்குக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கணவர் உயிரிழக்க திரைத்துறையில் இருந்து விலகினார் கருப்பாயி. நாட்டுப்புற பாடலுக்காக அவர் ஆற்றிய தொண்டை கவுரவித்து அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது தமிழக அரசு.

அட்டகாச பாடல்
இந்நிலையில் கருப்பாயி, தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு சிறப்பு நேர்க்காணல் அளித்துள்ளார். அதில் கட்டுடல் இளைஞன் மீது காதல் கொள்ளும் இளம்பெண் அவரிடம் பாடலின் மூலம் காதலை வெளிப்படுத்துவதை அழகான வார்த்தைகளால் அட்டகாசமாய் பாடியிருக்கிறார்.

8 வயது முதல்
தொடர்ந்து பேசிய அவர், இந்த காலத்து காதல் எல்லாம் செல்போனில் மட்டும்தான் உள்ளது என்றார். மேலும் தான் தனது 8 வயது முதல் இதுபோன்ற நாட்டுப்புற பாடல்களை பாடி வருவதாகவும் தெரிவித்தார் கொல்லங்குடி கருப்பாயி. அந்த வீடியோ உங்களுக்காக..












Click it and Unblock the Notifications