மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் பணப்பலன்? அமைச்சர் தந்த நம்பிக்கை
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினமும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை தகவல் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த தேர்தலின்போது தந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தியில் பலரும் உள்ளனர். பழைய ஓய்வூதியம் கொண்டுவருவது தொடர்பாக அரசு கமிட்டி அமைத்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம்ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுபடியும் நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு பெரிய சிரமம் இருக்காதபோது, எதற்காக அரசு தயங்குகிறது என்றும் ஊழியர்கள் கேட்டு வருகிறார்கள்.அதேபோல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்ற வருத்தமும் அரசு ஊழியர்களிடம் நிலவி வருகிறது.
அதுமட்டுமல்ல, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தாலும், அங்கெல்லாம் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லையே.. இங்கு மட்டும் ஏன் இப்படி குழு அமைக்க வேண்டும்?
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
எனவே, திமுக அரசு இதுபோன்ற நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் விடாமல் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்..
கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று சொல்வது பொய்யானது.. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறார்.. பழைய ஓய்வூதியம் குறித்தும் அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால், நேற்றைய தினமும், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பள்ளிக்கல்வித் துறை தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப் படும் என்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் மீண்டும் அமைச்சர் பெரியசாமியிடம் இதுகுறித்து நேற்று, கேள்வி எழுப்பப்பட்டது.. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மறவபட்டி கிராமத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, "மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். பொய் எவ்வளவு நாள் சொல்ல முடியும்? என்றே தெரியவில்லை. 10 முறை பொய் சொன்னால், அது உண்மையாகிவிடும் என்று எடப்பாடி நினைக்கிறார். அது நடக்காது.
4 வருடங்களில் கிடைக்காத சலுகைகளை மக்களுக்கு வீடு தேடிச்சென்று கிடைக்கச் செய்யும் பணியை முதல்வர் தற்போது மேற்கொண்டு வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, நம்முடைய முதல்வர் இதனை கொண்டு வந்துள்ளார். அத்தனை துறையும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது... எல்லா நிவாரணமும் கிடைக்கும்.
பழைய ஓய்வூதியம் எப்போது?
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications