பெட்ரோல் பங்க்கில் மாற்றம்.. பழைய வண்டியை நாங்க என்ன பண்றது? காய்கறி விலை ஏறுது? புலம்பும் டெல்லி
சென்னை: டெல்லியில் பழைய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மிகப்பெரிய நடைமுறை சிக்கலை உருவாக்கி வருகிறது.. அண்டை மாநிலங்களிலிருந்து வரும் காய்கறி வாகனங்கள் டெல்லிக்கு வர முடிவதில்லை. இதனால் காய்கறி விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. மற்றொருபக்கம் வாகன உரிமையாளர்கள் தங்கள் விலையுயர்ந்த கார்களை குறைந்த விலைக்கு விற்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட, அங்குள்ள மக்கள் முடிவு செய்துள்ளனர்.

டெல்லியில் வருடா வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பனிக்காலத்தில் காற்றின் தரக் குறியீடு 1,000 என்ற மோசமான நிலையை எட்டிவிடுகிறது.. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பெரும் ஆரோக்கிய குறைபாடுகளுக்கு நேரிடுகிறார்கள்.. அதிலும், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்புடையோரின் நிலைமை இன்னும் மோசமாகிறது..
காற்று மாசுபட காரணம்
இந்த மாசு ஏற்பட காரணம், பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள்தான் என்கிறார்கள்.. அதனால்தான், பழைய வாகனஙகளை குறிப்பாக, 15 வருடத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் 10 வருடத்துக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை கடந்த 1 முதல் தடை செய்யவும், அவைகளில் பெட்ரோல் போடவும் தடை விதிக்கப்பட்டது.
பெட்ரோலுக்கு தடை
காற்று தர மேலாண்மை கமிஷனின் இந்த உத்தரவையடுத்து, பழைய வாகனங்களை கண்டறிந்து போலீசாரும் கைப்பற்றி வருகிறாரகள்.. இதற்கென தனி டீம் களமிறக்கப்பட்டுள்ளது.. இந்த டீம், டெல்லி முழுவதிலுமுள்ள சுமார் 500 பெட்ரோல் பங்குகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.. வாகனங்களின் RC-ஐ சரிபார்த்தபிறகுதான், பெட்ரோல் டீசல் போடப்படுகிறது.
வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து, அது எந்த வருடத்தில் தயாரானது என்ற கருவியையும் பொருத்தி கண்டுபிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.. 4 சக்கர வாகனத்துக்கு ரூ.10,000 , பைக்குகள் என்றால் 5,000 என்று விதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலான CNG வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. முதல் நாளிலேயே சுமார் 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஞ்ச் ரோவர் கார்
பொதுமக்களின் ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு, இப்படியொரு அறிவிப்பு நடைமுறைப்படுத்தாலும், சில சிக்கல்களையும் இதனால் பொதுமக்கள் சந்திக்க நேரிடுகிறது.. குறிப்பாக, காஸ்ட்லி வாகனங்களை விற்கும் நிலைமை வந்துள்ளது.. ஒருவர் 2018-ல 55 லட்சம் தந்து ரேஞ்ச் ரோவர் கார் வாங்கினாராம்.. ஆனால், தற்போது சொற்ப விலைக்கு இந்த காரை விற்கும் நிலைக்கு வந்துவிட்டாராம்..
கார் வாங்கிய இந்த 15 வருஷத்தில் வெறும் 20000 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டியிருக்கிறாராம்.. இதை வேதனையுடன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றொருவர் நான் கார் வாங்கிய இந்த 10 வருடத்தில் 1 லட்சம் கி.மீ., கூட ஓடவில்லை... அதுக்குள்ளே தடை விதித்துவிட்டார்கள் என்று புலம்புகிறார்... அதேபோல, 50, 60 வயதை எட்டியவர்களும், எங்களது வாகனத்தைதான் எங்கு சென்றாலும் பயன்படுத்தி வருகிறோம்.. இனி எப்படி போவது? எங்களால் நடந்து போக முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
எகிறும் காய்கறி விலை
அதேபோல, ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வழக்கமாக வரும் காய்கறி வாகனங்கள், டெல்லி எல்லையிலேயே இறக்கிவிட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.. இதனால் காய்கறிகள் விலையும் டெல்லியில் உயரும் என தெரிகிறது..
இதனால் நடுத்தர மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்றும், அல்லது அதற்காக போராடவும் தயங்க மாட்டோம் என்றும் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications