அடுத்தடுத்த 2 சம்பவங்கள்.. சர்ரென மேலே போய்.. பட்டென சரிந்த ஓமிக்ரான்.. அப்போ குட்நியூஸ்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; ஓமிக்ரான் பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்து வரும் நிலையில் சில பெரு நகரங்களில் ஓமிக்ரான் கேஸ்கள் சட்டென குறைந்துள்ளது. திடீரென வேகமாக உயர்ந்த கிராப் இப்போது பட்டென சரிந்து நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது.

உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 2,774,311 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. உலகம் முழுக்க தற்போது 46,781,247 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். அமெரிக்காவில் நேற்று மட்டும் 672,872 கொரோனா கேஸ்கள் பதிவானது. அங்கு 14 லட்சத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவான நிலையில் கிராப் திடீரென சரிந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 185,112 கேஸ்கள் பதிவானது. இப்போது இந்தியாவில் 961,235 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இந்த நிலையில் 2 சம்பவங்களால் ஓமிக்ரான் பரவல் டிரெண்ட் நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிககாவில் என்ன நடந்தது?

தென்னாப்பிரிககாவில் என்ன நடந்தது?

முதல் சம்பவம், தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட ஓமிக்ரான் பரவல். அங்கு தினமும் இரட்டிப்பு வேகத்தில் கேஸ்கள் உயர்ந்தது. முதல்நாள் 1000 கேஸ்கள் பதிவானால் மறுநாளே 2000, அடுத்த நாள் 4000, அடுத்த நாட்களில் 8000, 16000, 32000 என்ற அளவில் கேஸ்கள் இரட்டிப்பு வேகத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் தென்னாபிரிக்க கேஸ்கள் திடீரென உச்சம் தொட்டது. எதிர்பார்க்க முடியாத வேகத்தில்.. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கேஸ்கள் உயர்ந்தது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் திடீரென கேஸ்கள் அங்கே சட்டென சரிந்தது. எந்த வேகத்தில் உயர்ந்ததோ அதைவிட அதிக வேகத்தில் சட்டென கேஸ்கள் சரிந்தது. மூன்று மடங்கு வேகத்தில் கேஸ்கள் குறைந்தது. அதாவது வேகமாக உச்சம் தொட்டு.. பளீர் என்று வேகத்தை குறைத்து ,கேஸ்கள் சரிந்தன. இதனால் டிசம்பரில் உச்சத்தை தொட்டு அந்த மாதமே ஊரடங்கு விதிகளில் தென்னாப்பிரிக்கா தளர்வுகளை கொண்டு வந்துவிட்டது. கடந்த 2 வருடத்தில் இருந்ததிலேயே மிக குறைவான கட்டுப்பாடுகள் தென்னாப்பிரிக்காவில் உள்ளது.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்த நிலையில் ஓமிக்ரான் கேஸ்கள் இப்படி சட்டென சரிவு குறித்து அமெரிக்காவின் டாப் அறிவியலாளரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான ஆண்டனி பவுச்சி முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதில், கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து சட்டென சரிந்துள்ளது. இது கொஞ்சம் நம்பிக்கை தரக்கூடிய செய்தி. நவம்பர் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவியது. அங்கு நவம்பரில் கிராப் மிக வேகமாக மேலே சென்றது.

ஆண்டனி பவுச்சி என்ன சொன்னார்?

ஆண்டனி பவுச்சி என்ன சொன்னார்?

ஆனால் இப்போது அங்கு கேஸ்கள் சட்டென குறைந்துவிட்டன. அங்கு சட்டென கிராப் சரிந்துவிட்டது. இந்த அலை நீண்ட நேரம் நீடிக்காது என்பதை இது காட்டுகிறது. வேகமாக இது உச்சம் தொட்டு உடனே கேஸ்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளது. இதுதான் மிகப்பெரிய நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. இதுதான் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. இதனால் ஓமிக்ரான் காரணமாக கேஸ்கள் வேகமாக பரவி, மிக வேகமாக உச்சம் தொட்டு, உடனே பரவல் முடியும் என்று நினைக்கிறேன்.

மும்பையில் என்ன நடந்தது?

மும்பையில் என்ன நடந்தது?

இரண்டாவது சம்பவம் மும்பை! தென்னாப்பிரிக்கா போல மும்பையிலும் இப்போது இதேபோல்தான் கேஸ்கள் வேகமாக குறைந்து இருக்கிறது. அங்கு கடந்த இரண்டு நாட்களில் பாசிட்டிவிட்டி சதவிகிதம் 30ல் இருந்து 20 ஆக குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் தினசரி கேஸ்கள் 20700ல் இருந்து 11647 ஆக குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் மும்பையில் தினசரி 2 என்ற அளவில் குறைந்துள்ளது. அங்கு வேகமாக உயர்ந்த தினசரி கேஸ்கள் உச்சம் தொட்டது.

சட்டென சரிந்தது?

சட்டென சரிந்தது?

இப்போது உச்சம் தொட்ட கேஸ்கள் வேகமாக சரிந்து உள்ளது. மும்பை மட்டுமின்றி அமெரிக்காவில் நியூயார்க் போன்ற பெருநகரங்களிலும் இதேபோல்தான் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இதே டிரெண்ட் இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் வரும் நாட்களிலும் ஏற்படும் என்று எதிர்பார்ப்படுகிறது. அதாவது மற்ற மாநிலங்களிலும் வரும் நாட்களில் வேகமாக கேஸ்கள் உச்சம் தொட்டு சட்டென சரியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நல்ல செய்தி

நல்ல செய்தி

இது ஒரு விதத்தில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. மூன்றாவது பரவல் வேகமாக முடிவிற்கு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓமிக்ரான் கேஸ்கள் பலருக்கு ஏற்பட்டு இப்போது ஆண்டிபாடி பலருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது பரவல் மட்டுமின்றி மொத்தமாக கொரோனா பெருந்தொற்று பரவலே இதனால் முடிவிற்கு வருகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது ஓமிக்ரான் பரவலோடு கொரோனா பெருந்தொற்று முடிகிறதோ என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

தமிழ்நாடு எப்போது

தமிழ்நாடு எப்போது

Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) ஆய்வுப்படி தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் ஜனவரி மாத இறுதியில் 80 ஆயிரம் என்ற அளவை தொடும். அதாவது இன்னும் இருபது நாட்களில் தமிழ்நாட்டில் தினமும் 80 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த மாத இறுதிக்கு பின் கேஸ்கள் உச்சம் தொட்டு அதன்பின் கேஸ்கள் வேகமாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+