சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்போ முடியவே முடியாதா? இனிதான் பல உருமாறிய கொரோனா வரப்போகிறதாம்.. எக்ஸ்பர்ட்ஸ் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: ஓமிக்ரான் பரவலோடு கொரோனா பெருந்தொற்று மொத்தமாக முடியும் வாய்ப்பு உள்ளதாக பல்வேறு உலக வல்லுனர்கள் தெரிவித்து வந்த நிலையில்.. இனிதான் பல புதிய கொரோனா வகைகள் தோன்ற வாய்ப்பு உள்ளதாக பாஸ்டன் மருத்துவ வல்லுனர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல்

    ஓமிக்ரான் வகை கொரோனா உருவான நாளில் இருந்தே உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தினசரி கேஸ்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஓமிக்ரான் வேகமாக பரவினாலும், இது மைல்ட் கேஸ்களைத்தான் ஏற்படுத்துகிறது.

    உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்! உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்!

    இதனால் தீவிர பாதிப்புகள் ஏற்படாத நிலையில், ஓமிக்ரான் பரவலோடு கொரோனா பெருந்தொற்று முடியும் வாய்ப்பு உள்ளதாக பல்வேறு உலக வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா இனி சாதாரண சீசன் காய்ச்சல் போல மாறிவிடும், இதோடு பெருந்தொற்று முடிவிற்கு வந்துவிடும் என்று உலக வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இந்த நிலையில்தான் பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லியனார்டோ மார்ட்டீன்ஸ் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு புதிய கொரோனா வகைகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது கொஞ்சம் இருந்த நம்பிக்கையையும் இவர்கள் உடைத்து போட்டுள்ளனர். கிரேக்க எழுத்துக்களை ரெடியாகி வையுங்கள்.. புதிய உருமாறிய கொரோனாவிற்கு பெயர் வைக்க நேரிடலாம் என்று இவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், கொரோனா வேகமாக பரவுகிறது .

    ஓமிக்ரான் கொரோனா

    ஓமிக்ரான் கொரோனா

    முக்கியமாக ஓமிக்ரான் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. ஓமிக்ரான் பல நாடுகளில் வேகமாக பரவி உள்ளதால், அது அதிகமாக உருமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளது. அதிக நபர்களிடம் ஒரு வைரஸ் பரவினால் தானாக அது அதிக முறை உருமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. இது புதிய உருமாறிய கொரோனா வகைகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது. இதற்கு முந்தைய கொரோனா வகைகளை விட ஓமிக்ரான் வேகமாக பரவி உள்ளது.

    புதிய கொரோனா

    புதிய கொரோனா


    இதனால் இதற்கு முந்தைய வகைகளை விட ஓமிக்ரான் பல புதிய உருமாறிய கொரோனாவை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன. மக்களுக்கு எதிர்ப்பு சக்தி இருப்பதால் இப்போது ஓமிக்ரான் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் அடுத்தடுத்து வரும் உருமாறிய கொரோனா வைரஸ்களும் இதேபோல் மைல்ட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதைவிட தீவிரமான உருமாறிய கொரோனா பரவும் அபாயமும் உள்ளது.

    உருமாறிய ஓமிக்ரான்

    உருமாறிய ஓமிக்ரான்

    ஓமிக்ரான் பரவ பரவ புதிய உருமாறிய கொரோனா உருவாகும் அபாயம் உள்ளது. இதனால் நாம் கொரோனா பரவல் முடிய போகிறது என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஓமிக்ரான் டெல்டாவை விட இரண்டு மடங்கும், முதலில் உருவான கொரோனாவை விட 4 மடங்கும் அதிகம் வேகமாக பரவ கூடியது. அடுத்த வரக்கூடிய கொரோனா இதை விட தீவிரம் மிக்கதாக இருக்கும் அபாயம் உள்ளது.

    உருமாறிய கொரோனா

    உருமாறிய கொரோனா

    எனவே முடிந்த அளவு ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். ஓமிக்ரான் பரவலோடு கொரோனா முடிந்துவிடும் என்று தப்பு கணக்கு போட்டுவிட கூடாது. முக்கியமாக விலங்குகள், பறவைகளிடம் ஓமிக்ரான் பரவினால் அதனால் இன்னும் பல புதிய வகை கொரோனா உருவாகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இப்போதே ஓமிக்ரான் பரவலை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும், என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லியனார்டோ மார்ட்டீன்ஸ் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    Omicron Coronavirus spread may create new variants says experts in the new report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X