தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி- சுகாதாரத் துறை
சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி வருகிறது. 600 க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமல்
இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி வரும் 31-ஆம் தேதி முடிவெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பரிசோதனை
ஓமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் ஓமிக்ரான் ஏற்படும் நிலை மாறி ஓமிக்ரான் தமிழகத்தில் சமூக பரவலாகி வருகிறது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் குணமடைந்து விட்டதாகவும் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 11 பேரில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட 7 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மொத்த எண்ணிக்கை
திருவண்ணாமலை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications