ஆம்னி பஸ்கள்.. முடிச்சூர் பேருந்து முனையம் திறப்பது எப்போது?.. சேகர்பாபு சொன்ன அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பேருந்து முனையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கிளம்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

Omni Bus Parking Yard Built At Mudichur When will bus terminal open? Update from Sekar babu

இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பணிமனையில் இருந்து இயக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஆம்னி பேருந்துகள் ஏற்றி செல்லலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடியில் நின்று செல்லும் என அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர் சொந்த ஊர் சென்றதால் மறைமலைநகரில் அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயம்பேட்டில் இருந்து தற்போது ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கோயம்பேட்டிற்கு பதிலாக முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

ஆம்னி பேருந்துகளின் டிரைவர்களுக்கு போதிய வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லாததால் பேருந்துகளின் அருகிலேயே டிரைவர்கள் திறந்தவெளியில் குளிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை இன்று ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (11.2.2024), சென்னை வெளிவட்ட சாலை, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை (Idle Parking for Omni Buses) நானும், மாண்புமிகு அமைச்சர் திரு.சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தோம்.

Omni Bus Parking Yard Built At Mudichur When will bus terminal open? Update from Sekar babu

நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தோம். இந்நிகழ்வில் சிஎம்டிஏ அதிகாரிகள் உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் திரு.சுந்தரபாண்டியன், சி.எம்.டி.ஏ., செயற்பொறியாளர்கள் திரு.ராஜன் பாபு, திரு.பாலமுருகன் & துறை அலுவலர்கள் உடனிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார் சேகர்பாபு.

இதனைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்திலும் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு , பல்வேறு தடைகள் உடைத்தெறியப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையமானது கட்டப்பட்டு வருகிறது. 5 ஏக்கரில் 27 கோடி ரூபாய் செலவில் ஆம்னி பேருந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிற்கும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சேகர்பாபு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+