அல்லோகலப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்! வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகள்!
சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து தற்போது சென்னை வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வர விடாமல் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிராட்வேயிலிருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் வந்தது. ஆனால் அங்கும் இடநெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இந்த பொங்கலுக்கு அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. முதலில் தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு அதாவது பொங்கல் கழித்து அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அது போல் அரசு விரைவு பேருந்துகள் எல்லாம் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
அதாவது கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை, போதிய கட்டமைப்புகள் இல்லை. எங்கள் பயணிகள் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர். தற்போது 2 நாட்களுக்கு முன்பு மொத்தமாக கிளாம்பாக்கம் செல்ல வேண்டும் என்றால் எப்படி, பயணிகளை எப்படி அலைக்கழிக்க வைக்க முடியும்.
அதற்குத்தான் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல கால அவகாசம் கேட்டிருந்தோம் என கூறியிருந்தனர். ஆனால் அரசோ எங்கள் உத்தரவை மீறினால் குற்ற நடவடிக்கை பாயும் என போக்குவரத்து கழகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தைப்பூசம், குடியரசுத் தினம் என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்ல 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான பயணிகள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதி வழங்காததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் முதலே பதற்றமான சூழல் இருந்தது.
மாலை 5 மணிக்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து பயணிகளுடன் இயக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்னி பேருந்துகள் வளாகத்தை சுற்றி 100 -க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அப்போது போலீஸாருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தடுப்புகளை அமைத்து பேருந்து நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 7 மணி முதல் முன் பதிவு செய்த பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல போலீஸாரும் அதிகாரிகளும் அறிவுறுத்தினர்.

பயணிகள் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் குழப்பமடைந்தனர். அது போல் இரவு நேரத்தில் குடும்பத்துடன் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களுக்கு முறையான அறிவுறுத்தல்கள் ஏதும் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் அரசு பஸ்களில் ஏறிச் சென்றனர்.
இந்த நிலையில் ஒரு சில ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் கிளாம்பாக்கத்திலிருந்து சில ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு சென்றன. இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து தற்போது சென்னை வரும் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வர விடாமல் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கிளாம்பாக்கம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகள் பயணிகளை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டு சென்றன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications