நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி! 14ஆம் தேதி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தும் வேல்முருகன்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளுடன் வேல்முருகன் வரும் 14ஆம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.
அதேபோல் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் கிராமங்கள் வரை கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கவுள்ளார். இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முகாம் பரபரப்பாக காணப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் முன்கூட்டியே அதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் வேல்முருகனும் தனது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார் படுத்தும் பணிகளை தொடங்கிவிட்டார்.
திமுக கூட்டணியில் வேல்முருகன் இருந்தாலும் கூட சமீபகாலமாக கூட்டணிக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக சீறத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு, என பல விவகாரங்களில் திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் வேல்முருகன்.

அதேபோல் சட்டமன்ற வளாகத்தில் ஒருமுறை பேட்டியளித்த போது கூட திமுக மற்றும் சபாநாயகருக்கு எதிராக ஆவேசம் காட்டினார். இதனால் வேல்முருகன் திமுக கூட்டணியில் நீடிப்பாரா என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.
வரும் 14ஆம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர்களிடம் கலந்துரையாடும் வேல்முருகன், மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உரிய மரியாதை தருகிறார்களா என்பது குறித்து கேட்டறிவார் எனத் தெரிகிறது. கட்சி நிர்வாகிகள் கருத்தை அறிந்து வேல்முருகன் முக்கிய முடிவு எடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications