ஓணம் பண்டிகை.. துள்ளிக்குதிக்கும் மலையாள மக்கள்.. தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ரயிலானது, ஆகஸ்ட் 26ஆம் தேதி தாம்பரத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை மட்டும் கேரள மக்கள் உலகமெங்கும் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடுகிறார்கள் என்பதுதான் தனிச்சிறப்பு.

கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பருவமழைக் காலம் முடிந்து எங்கும் பசுமையாக இருக்கும் காலத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கேரளத்தின் அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை கேரள மக்களால் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அறுவடைத் திருவிழாவான ஓணம், கேரள மாநிலத்தில் மிகுந்த கோலாகலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இது பாதாள லோகத்தை ஆளும் மன்னன் மகாபலி பூலோகத்தில் வசிக்கும் தனது மக்களை காண வருவதை நினைவுபடுத்தும் வகையில் திருவோணம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கானம் விற்றேனும் ஓணம் கொண்டாடு என்பது மலையாள பழமொழி. வசதி-வாய்ப்பற்றவர்கள் தங்கள் வீடுகளில் உணவுக்காக சேமித்து வைத்திருக்கும் கானப்பயறை விற்றாவது ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது இதன் பொருளாகும். இதில் இருந்து ஓணம் பண்டிகைக்கு கேரள மாநில மக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது. ஒருகாலத்தில் ஒரு மாத காலம் வரை கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகை தற்போது 10 நாட்களாக சுருங்கியுள்ளது. மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கேரள மாநில அரசு 10 நாட்கள் விடுமுறையும் அளித்து வருகிறது.
ஓணம் பண்டிகை நாளில் விருந்து களை கட்டும். அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ஓண சாத்யா என்ற உணவு தயாரித்து உற்றார், உறவினர்களுக்கு அளித்து ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட செல்லும் மக்களுக்காக தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு ரயிலானது, ஆகஸ்ட் 26ஆம் தேதி தாம்பரத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு 11.40க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45க்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications