ஓணம் பண்டிகை.. உற்சாகத்தில் மலையாள மக்கள்.. சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை
சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பர் 02 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
கேரளாவில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் 29ஆம் தேதியன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், நாளை சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட அறிவிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் 29ஆம் தேதி சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
சங்ககால கணிப்புபடி கடவுள் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்த நாளாகவும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹயக்கிரீவர் அவதார தினமாகவும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications