கோடநாடு வழக்கில் இபிஎஸ் மீது வைக்கப்படும் புகார்.. நிருபர் கேட்ட கேள்விக்கு சீமான் சொன்ன பளீர் பதில்
சென்னை: கோடநாடு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வைக்கப்படும் புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது. இங்கு 2017 ஏப்ரல் 24ல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு போலீஸ் தற்போது மேல்விசாரணை நடத்தி வருகிறது. இதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட சயான் வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது கோடநாடு வழக்கு குறித்தும், தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

குப்பை
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை முழுக்க குப்பையாக இருக்கிறது. எழில் நகரில் 100 ஏக்கரில் குப்பை கிடக்கிறது. ஷட் டவுன் என்று சொல்லி பகல் முழுக்க சென்னையில் மின்சாரம் இல்லாமல் இருக்கிறது. இதை எல்லாம் சீரமைக்காமல் எப்படி சிங்கார சென்னை சாத்தியமாகும். சுவரொட்டிகளை நீக்கினால் மட்டும் சிங்கார சென்னை ஆகிவிடுமா. நாங்கள் தமிழர் நாகரீகத்தை பாராட்டி சுவரொட்டி ஒட்டுவோம் அதை பார்த்து பயந்து இப்போது சுவரொட்டிகளை நீக்கி வருகிறார்கள்.

ஓபிஎஸ்
குடிசை மாற்று வாரியத்தில் எல்லாம் தொட்டாலே உதிர்கிறது என்று கூறுகிறார்கள். ஏன் அதை போய் தொடுகிறீர்கள். வீடுகளின் நிலை அவ்வளவு மோசமாக உள்ளது. ஆட்சியாளர்களின் ஆட்சி நிலை மோசமாக இருக்கிறது. வீடுகள் இருக்குமா, உயிரோடு காலையில் தூங்கி எந்திரிக்க முடியுமா என்று தெரியாமல் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டும்போதே ஒரு பக்கம் அது இடிந்து விழும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கடனை
தமிழ்நாடு கடனில் மூழ்கி உள்ளது என்கிறார்கள். ஆனால் எப்படி கடன் ஏற்பட்டது என்று சொல்வதில்லை. இலங்கை அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றி உள்ளனர். இதை பற்றி நான் தினமும் திட்டிக்கொண்டு இருந்தேன். அதனால் நான் பேசியதும் இப்போது மாற்றிவிட்டனர். முன்பு இலவசத்தை விலையில்லா திட்டம் என்று மாற்றினார்கள். நாங்கள் இப்போது இந்துக்கள் கிடையாது என்கிறோம்.

பெயர் மாற்றம்
நாங்கள் சைவர்கள் என்கிறோம். அப்படி என்றால் இந்து அறநிலையத்துறை என்பதை தமிழர் சமய நலத்துறை என்று பெயர் மாற்றுங்கள். எல்லாத்தையும் பெயர் மாற்றினால் இதையும் பெயர் மாற்றுங்கள்.கோவிலை எங்களிடம் கொடுங்கள் என்று சிலர் பேசி வருகிறார்கள்.. நம்முடைய திருப்பதி கோவிலையும், ஐயப்பன்சாமி கோவிலையும் அண்டை மாநிலங்களிடம் இருந்து மீட்டு எடுங்கள்..அதன்பின் கோவில் நிர்வாகம் பற்றி பேசலாம், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சீமான் கேள்வி
இந்த நிலையில் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு உங்களின் கருத்து என்ன என்று நிருபர் சீமானிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சீமான், இதில் யார் சம்பந்தப்பட்டு இருப்பார் என்றெல்லாம் இப்போது பேச முடியாது. யார் உண்மையான கொலையாளியோ அவர் கோடநாடு கொலை வழக்கில் கண்டிப்பாக சம்பந்தப்பட்டு இருப்பார். விசாரணை நடக்கிறது. அதை பற்றி கருத்து கூற முடியாது. போகிற போக்கில் பேச முடியாது. வழக்கில் முடிவு வரட்டும் அப்போது பார்க்கலாம், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
-
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications