ஒரே ஒரு லிஸ்ட்தான்.. மொத்த தமிழக காங்கிரசும் அல்லோகலப்பட்டு போச்சு பாருங்க.. என்னங்க நடக்குது?
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் இழுபறியாகவே இருந்து வருகிறது. கட்சியில் உள்ள முன்னாள் தலைவர்கள், சீனியர் லீடர்கள் பலரும் தங்களின் ஆதரவாளர்களுக்கு பதவி வாங்கித்தந்து விட வேண்டும் என டெல்லிக்கு (கட்சி மேலிடம்) காவடி தூக்கி வருகிறார்கள்.
இருப்பினும் மேலிடம் அசைந்து கொடுக்கவில்லை. மகாராஸ்ட்ரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் மேலிடம் கவனம் செலுத்தி வருவதால் தமிழக காங்கிரசை பற்றி கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகையோ, கோஷ்டி தலைவர்களின் ஆட்களுக்கு பதவி கிடைத்து விடக்கூடாது. ஒட்டுமொத்த பதவிகளில் 80 சதவீதம் தனது ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்கிற திட்டத்தில் ஒரு பெரிய லிஸ்ட்டை மேலிடத்தில் ஒப்படைத்து விட்டு, காத்திருக்கிறார்.

இதற்கிடையே, செல்வப்பெருந்தகைக்கு எதிராக வரிந்து கட்டும் கோஷ்டி தலைவர்கள், பதவியிலிருந்து அவரை மாற்றிவிட வேண்டும் என எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், எப்படியாவது மாநில நிர்வாகிகளாகவும், மாவட்டத் தலைவர்களாகவும் தங்களின் ஆதரவாளர்களை கொண்டு வந்து செல்வப்பெருந்தகைக்கு குடைச்சல் தர திட்டமிட்டுள்ளனர்.
இதனையறிந்த செல்வப்பெருந்தகை, தான் கொடுத்த லிஸ்ட்டிற்கு மேலிடத்தின் ஒப்புதலைப்பெற எடுத்த பகீரத முயற்சிகளும் பலனளிக்காததால் நொந்து போயிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இந்த நிலையில், மன நிம்மதிக்காக வெளிநாட்டிற்கு போய் வரலாம் என முடிவு செய்து, தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூர் மற்றும் சீனாவுக்கு நேற்று இரவு ஃப்ளைட் ஏறியிருக்கிறார். கட்சிகாரர்களிடம், தேர்தல் பிரச்சாரத்துக்காக மகாராஸ்டா செல்கிறேன் என சொல்லிவிட்டு சீனாவுக்கு பறந்துள்ளார் செல்வப்பெருந்தகை.
குழப்பம் மேல் குழப்பம்: 2024 ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 13 முதல் 20 நவம்பர் 2024 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இந்த ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாம். இதற்காக தமிழக எம்பிக்கள் சிலர் பணிகளை செய்ய.. பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாம். "சிலரது" எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருப்பதால், என்ன செய்வது என காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் யோசிக்கிறார்களாம். காங்கிரஸில் நடக்கும் இந்த மோதல்தான் தற்போது ஹை-லைட் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தினர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருக்கிறார் அஜோய் குமார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார் அஜோய் குமார்.. தமிழக காங்கிரசில் நடக்கும் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் இப்போது வரை அஜோய் குமா வழியாகத்தான் காங்கிரஸ் மேலிடம் விசாரித்து வருகிறது.
அந்த வகையில், மேலிட பொறுப்பாளரின் ஆசியை பெற காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் விரும்புவது இயல்பான விசயம். இது காலம்காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். அதாவது, மேலிட பொறுப்பாளர்களாக யார் வருகிறார்களோ அவர்களை வளைத்துப்பிடித்துக்கொள்வார்கள்.
அதனால், மேலிட பொறுப்பாளர்களின் காட்டில் எப்போதும் மழை பொழிந்து கொண்டிருக்கும். இந்த நிலையில், தமிழக காங்கிரசின் தற்போதைய மேலிட பொறுப்பாளரான அஜோய்குமார், ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார்.
2024 ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 13 முதல் 20 நவம்பர் 2024 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி ஜார்க்கண்ட் சட்டப் பேரவையின் அனைத்து 81 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 23 நவம்பர் அன்று அறிவிக்கப்படும். ஹேமந்த் சோரன் தற்போதைய முதல்வராக இருக்கிறார்.
2019ல் ஜார்கண்டில் நடந்த தேர்தலில்.. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து மாநில அரசாங்கத்தை அமைத்தது. இதில் ஹேமந்த் சோரன் முதல்வரானார். இந்த தேர்தலில் மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து உள்ளன. பாஜக, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications