23 தீர்மானத்தில்.. இதை மட்டும் கவனிச்சீங்களா? பாஜகவை சூடாக்கும் ஒரு முடிவு.. அடடா எடப்பாடியா இது?
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட 23 தீர்மானங்களில் ஒரே ஒரு தீர்மானம் பாஜகவை லேசாக சீண்டும் விதத்தில் அமைந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 13 தீர்மானங்களில் ஆளும் திமுகவிற்கு எதிராக கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் ஆளுமைத் திறனோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று கழகத்தை வழிநடத்தி வரும், நம் அனைவரின் போற்றுதலுக்கு உரியவரும், தொண்டர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆட்சி செய்து வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமானஎடப்பாடி கே. பழனிசாமிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தன் உயிர் மூச்சாக முன்னிறுத்தி தொடங்கப்பட்ட 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கம், மதுரையில் நடத்திய 'கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும்
வடகிழக்குப் பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும்; 'மிக்ஜாம்' புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும்; காலத்தே மீட்புப் பணிகளை மேற்கொள்ளாமலும், மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு, B புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு சுடும் கண்டனம்; பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகளை நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது வேண்டுமென்றே, திட்டமிட்டு சட்டமன்ற B எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பச் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்!
மீனவர்கள் நலன் பாதுகாக்க, திமுக-வால் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் மற்றும் இலங்கை கடல் கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
மாநில உரிமைகள் பறிபோனதற்கு தி.மு.க-வே முழுமுதற் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மக்களின் கவனத்தை திசை திருப்பவும்; பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றவும், பல்வேறு நாடக அரங்கேற்றங்களை நிகழ்த்தும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் என்று கூறப்பட்டு உள்ளது.
ஒரே ஒரு தீர்மானம்: அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட 23 தீர்மானங்களில் ஒரே ஒரு தீர்மானம் பாஜகவை லேசாக சீண்டும் விதத்தில் அமைந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு குறைப்பாட்டால் கடந்த 13ம் தேதி நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவைக்குள் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். உள்ளே அவர்கள் புகை குண்டுகளை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகை ஏற்படுத்தும் குண்டுகளை அவர்கள் உள்ளே கொண்டு வந்துள்ளனர். மறைத்து வைத்து அவர்கள் கொண்டு வந்த குண்டுகளை அவைக்குள் தூக்கி எரிந்து உள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கையில் கொண்டு வந்த அவர்கள் மக்களவைக்குள் புகுந்து கோஷங்களையும் எழுப்பி உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இது பற்றி விளக்கம் அளிக்கும்படி கோரிக்கை வைத்த எம்பிகளை நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மொத்தமாக 146 எம்பிக்கள் இதை பற்றி கேள்வி கேட்க முயன்றதற்கே சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இப்போது அதே விவாகரத்திற்கு எதிராக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications