திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூலில் அமைந்து உள்ளது கங்கையம்மன் கோவில். இந்த கோயில் வளாகத்தில் இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) திடீரென மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது.

இந்த கோர சம்பவத்தில் அங்கிருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரில் சூர்யா(24) என்பவர் உயிரிழந்தார். மேலும் பலத்த காயடைந்த திருமால்(22), யுவராஜ்(22), ஜெயராம், ராகவன் உள்ளிட்ட 4 பேர் சிகிச்சை பெற்றுகிறாக்ரள்.

குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த 4 பேரில், திருமால்(22), யுவராஜ்(22), உள்ப 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடித்தது என்ன பொருள், இதற்கு விபத்து காரணமாக அல்லது சதியா அல்லதுவேறு ஏதானும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications