Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.. உஷார் நிலையில் சென்னை போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டையே உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தேவையற்ற பதற்றத்தை குறைக்க சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

One Year Since Armstrong s Assassination Chennai Police on High Alert to Prevent Tension

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு மீண்டும் ஜூலை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தேவையற்ற பதற்றத்தை குறைக்க சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எந்தவித அசம்பாவிதங்களும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே போலீசார் உஷார்படுத்தப்பட்டு சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்பேரில் தொடர்ந்து போலீசார் குற்ற பின்னணி உள்ள ரவுடிகளை கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர் என கூறப்படும் பிரபல ரவுடி ஒத்தக்கண் ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். மேலும் நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளியான வெள்ள பிரகாஷ் கைது செய்யப்பட்டார். நாகேந்திரனின் தங்கை கற்பகத்தையும் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரம்பூரில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆனந்தன் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் 6 அடி சாலையாக, குறுகலாக இருப்பதாலும், அந்த பகுதியில் இரண்டு பெரிய பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளதாலும் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+