Exclusive: வக்பு சட்டம்.. எங்கள் நிலத்தை கபளீகரம் செய்யவே மத்திய அரசு இதை செய்கிறது- நெல்லை முபாரக்
சென்னை: மத்திய அரசு வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை இன்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். வக்பு வாரியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வக்பு நிலங்களை அபகரிக்கவே இப்படிச் செய்வதாக நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் கிரண் ரிஜூஜு வக்பு வாரிய சட்டத் திருத்தத்தைத் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த சட்ட திருத்த மசோதா குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
நெல்லை முபாரக்: அதில் அவர், "இந்த வக்பு சட்ட திருத்தத்தைச் சிறுபான்மையினர் மட்டுமின்றி.. ஜனநாயக சக்திகள் அனைவரும் எதிர்க்க வேண்டும். யாருமே இந்த வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் தேவை எனக் கேட்கவில்லை. சொல்லப்போனால் ரயில்வே மற்றும் ராணுவத்திற்குப் பிறகு நாட்டில் அதிக இடம் வக்பு வாரியத்திற்கு இருக்கும் நிலையில், அதை மீட்டுத் தர வேண்டும் என்றே கோரிக்கை வைத்து வருகிறோம்.
அதைச் செய்யாமல் உள்நோக்கத்துடன் இப்போது 40 சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளனர். நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மறைமுகமாக இந்த சொத்துகளை அரசின் பக்கம் திசை திருப்பும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்கிறோம். வக்பு நிலமும், அதன் சொத்துகளும் அரசுடையது இல்லை. முஸ்லீம்கள் வளர்ச்சிக்காகச் சொத்துகள் அதிகம் இருப்போர் கொடுத்தவை தான் இவை. அதைச் சிறுபான்மையினரின் தேவைக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை நிர்வகிக்கவே வக்பு வாரியம் உருவாக்கப்பட்டது.
குழப்பத்தை ஏற்படுத்தும்: வக்பு வாரியத்தின் தன்னாட்சியை இல்லாமல் ஆக்கவே இந்த சட்ட திருத்தம். சொத்து யாருடையது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பது, வக்பு நிர்வாகத்தில் பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களை உள்ளே கொண்டு வருவது என்பது பிளவு படுத்தும் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். இது அரசியலைப்பு உறுதி செய்த உரிமைக்கு எதிரானது.
இந்த சட்ட திருத்தம் அவசியமே இல்லாதது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுத் தர வேண்டும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
பெரிய சிக்கல்: ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 40 சட்ட திருத்தங்களைச் செய்துள்ளனர். வக்பு வாரியத்தின் சொத்து குறித்து பிரச்சினை வந்தால் அது யாருடைய சொத்து என்பதை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்பது எந்த விதத்தில் நியாயமானது. இதையெல்லாம் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும். இது நீதிக்குப் புறம்பானது.
ஒரு தனிநபரால் முஸ்லீம் சமூகத்தின் நலனுக்கு வழங்கப்படுவதே வக்பு நிலம். ஒரு முறை வழங்கப்பட்டால் அது எப்போதும் வக்புக்கு சொந்தமானது தான். அதில் எதாவது சிக்கல் என்றால் அதை நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும். அந்த பொறுப்பை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பது சரியானது இல்லை. தனி நபரிடம் கொடுப்பது தவறானது.
முஸ்லீம் அல்லாதவர்கள்: இவர்கள் பெண் சமத்துவம் பேசுகிறோம்.. அவர்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்பதெல்லாம் தவறானது. இதுவரை அதற்காக இவர்கள் எதையுமே செய்யவில்லை. வக்பு வாரியத்தில் ஏற்கனவே பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால், பெண்களுடன் சேர்த்து முஸ்லீம் அல்லாதவர்களும் இருக்க வேண்டும் என்பது எப்படிச் சரி..
குறிப்பிட்ட மதம் சார்ந்த நிர்வாகத்தில் வேறு மதத்தினரைச் சேர்ந்தவர் இருக்கலாம் என்பதை அரசே சொல்வது எப்படிச் சரி.. இது குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை தான்.
கபளீகரம்: மேலும், வக்பு நிலத்தை ஷியா, போரா என அனைத்து பிரிவினருக்கும் பிரித்துக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு.. எந்த பிரிவினருக்கு நிலத்தை வழங்கியுள்ளனர் என்பது தானமாகக் கொடுக்கும் போது தீர்மானித்துவிடுவார்கள். அதை வேறு பிரிவினருக்குக் கொடுப்பதும் சட்டத்திற்கு எதிரானது தான். வக்பு வாரியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் சொத்துகளைக் கபளீகரம் செய்யவே இதைச் செய்கிறார்கள்.
இப்போது எப்படி சொத்துகளை சில தொழிலதிபர்களுக்கு விற்கிறார்கள். அதேபோல வக்பு வாரிய சொத்துகளைத் தனிநபர்களுக்குக் கொடுக்கவும் அரசு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் நடவடிக்கை தான் இது" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications