அரங்கம் அதிர்ந்தது.. சுமை தூக்கும் தொழிலாளர்கள், வாசகர்களுடன் "ஒன்இந்தியா" மாஸாக கூலி கொண்டாட்டம்!
சென்னை: சினிமா கதைக்கும், நிஜ வாழ்க்கையின் நாயகர்களுக்கும் இடையே பாலத்தை அமைக்கும் ஒரு புதுமையான முயற்சியை OneIndia முன்னெடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், அமீர் கான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும், "கூலி" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை, சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் 100 சுமை தூக்கும் தொழிலாளர்களுடன், 50 "ஒன்இந்தியா" வாசகர்களையும் இணைத்து சென்னையிலுள்ள சத்யம் பிவிஆர் திரையரங்கில் நடத்தியுள்ளது உங்கள் "ஒன்இந்தியா."

சென்னை துறைமுகத்திலிருந்து வெள்ளித்திரை
"சென்னை துறைமுகத்திலிருந்து வெள்ளித்திரை வரை" (From Chennai Harbour to the Big Screen) எனும் அடிப்படையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, கூலி படத்தில் சொல்லப்பட்ட கதைக்கும், நிஜ வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் உள்ள தொடர்பை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது.
திரைப்படத்தின் கருப்பொருளான, உறுதியையும், தன்னம்பிக்கையையும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்துபவர்கள்தான் சுமை தூக்கும் தொழிலாளர்கள், இந்த நிகழ்வில் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். அதே மாதிரி, படம் தொடர்பான ஓபன் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வாசகர்களும் அவர்களுடன் இணைந்து, இந்த நிகழ்வை ஒரு சிறப்புமிக்க கொண்டாட்டமாக மாற்றினர்.

"ஒன்இந்தியா" தலைமை நிர்வாக அதிகாரி கருத்து
இது குறித்துப் பேசிய OneIndia தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராவணன், "திரையில் சொல்லப்படும் கதைகளுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்க்கைக் கதைகளுக்கும் சக்தி உண்டு என OneIndia நம்புகிறது. சென்னை துறைமுகத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களையும், எங்கள் வாசகர்களையும் 'கூலி' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அழைப்பதன் மூலம், இந்த மறைக்கப்பட்ட நாயகர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாங்கள் விரும்பினோம். இது நிஜ வாழ்க்கையையும், நிஜமான போராட்டங்களையும், உண்மையான இந்தியாவையும் கவுரவப்படுத்தும் எங்கள் வழி" என்றார்.

இதயபூர்வமான வரவேற்பு
நமது வாசகர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பங்கேற்ற இந்த நிகழ்வால், திரையரங்கம் வெறும் கைதட்டல்களால் மட்டுமல்ல, தங்களின் உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள் மற்றும் கொண்டாட்ட உணர்வுகளால் நிறைந்து காணப்பட்டது. திரைப்படத்தின் முக்கிய காட்சிகளின்போது எழுந்த ஆரவாரங்களும், அமைதியான தலை அசைப்பு அங்கீகாரங்களும், சினிமாவுக்கும், அன்றாட வாழ்க்கையின் நாயகர்களுக்கும் இடையே உள்ள ஆழமான உணர்வுபூர்வமான தொடர்பை வெளிப்படுத்தியது.

இந்த நிகழ்வின் மூலம், OneIndia நிறுவனம் பொழுதுபோக்கையும், சமூக அக்கறையையும், சமூகத் தாக்கத்துடன் இணைக்கும் அதன் கடமையை மீண்டும் செய்துள்ளது. ஒரு திரைப்பட ரிலீஸ் என்பது, ரீல் கதையை தாண்டி, அதுவே ஒரு நிஜமான, உணர்ச்சிக் கதையாக மாறும் என்பதை இந்த சிறப்பு ஏற்பாடு எடுத்துக் காட்டியது.













Click it and Unblock the Notifications