"ஒன்இந்தியாதமிழ்" திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டியில்.. முதல் 3 பரிசை தட்டிச் சென்ற சிறுமிகள்!
சென்னை: மார்கழி மாதத்தின் ஆன்மீகச் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட திருப்பாவை - திருவெம்பாவை பாடும் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குவிந்த வீடியோக்கள், திணறிய நடுவர் குழு
தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இந்தப் போட்டிக்காக வந்திருந்தன. மழலை மாறாத குரலில் குழந்தைகள் பாடிய விதம் நடுவர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு குழந்தையும் மிகச் சிறப்பாகப் பாடியிருந்தனர். அவர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாகப் பாடல்களின் உச்சரிப்பு, ராகம் மற்றும் பிழையின்றி பாடுதல் ஆகியவற்றை நுணுக்கமாகக் கவனித்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய நடுவர் குழு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது.

வெற்றி வாகை சூடிய சிறுமிகள்
கடும் போட்டிக்கு இடையே, நடுவர்களின் ஒருமனதான முடிவின்படி பின்வரும் மூன்று குழந்தைகள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:
- முதலிடம் (ரூ. 2000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்): சிதம்பரத்தைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் - சிவசங்கரி தம்பதியினரின் மகள் சி.சி.கான ஸ்ரீ (10). இவர் அதிகப்படியான பாடல்களைப் பிழையின்றி, தெளிவான உச்சரிப்போடு பாடி முதல் இடத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

- இரண்டாமிடம் (ரூ. 1000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்): சென்னையைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஷ்ரத்தா சீனிவாசன் (LKG). இவர், முதல் பரிசு பெற்ற சிறுமிக்கு அடுத்தபடியாக, அதிகப்படியான பாடல்களை திறம்பட பாடியதால், இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

- மூன்றாமிடம் (ரூ. 500 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்): திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் - அபிராமி தம்பதியினரின் மகள் ஐ. அனன்யா (7). இரண்டாம் வகுப்பு பயிலும் இவர், பக்தி மணம் கமழப் பாடி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பாராட்டுக்கள்
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு உரிய பரிசு வவுச்சர்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் ஒன்இந்தியா தமிழ் நிர்வாகம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மகிஷாஸ்ரீ - விருதுநகர்
அது மட்டுமா, பல சிறுவர், சிறுமிகள் பாடல்களை முழுமையாக பாடாவிட்டாலும், புகைப்படங்களை அனுப்பி நமது இணையதளத்தில் வெளியிட கோரியிருந்தனர். அடுத்த முறை, சிறப்பாக தயாராகி போட்டியில் பங்கேற்கப்போவதாக ஆர்வம் காட்டியிருந்தனர். அவர்களின் புகைப்படங்களை வரிசைப்படுத்துகிறோம். வாழ்த்துக்கள்..

ஹரிணி, சென்னை

அர்ஜுன் கோவை

விசாகா புவனேஸ்வரன் - சென்னை

சாய் தர்ஷிகா, வேடசந்தூர்












Click it and Unblock the Notifications