இந்தியாவுக்கு அடிச்சது யோகம்.. ரஷ்யாவை மட்டும் நம்பியது போதும்! அந்தமான் கடலில் கிடைத்த பொக்கிஷம்!
சென்னை: உலக அளவில் பெட்ரோல் மற்றும் நிலக்கரிக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை உலக நாடுகள் தேடி வருகின்றன. அந்தவகையில் இந்திய அரசின் ஓஎன்ஜிசி இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கண்டறியும் ஆழ்துளை ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி துறைக்கு முக்கிய பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் அந்தமான் தீவுகளின் கிழக்கு கரைப் பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பெட்ரோல் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
அவற்றுக்கான எரிபொருள் தேவையும் அதிகரித்துள்ளதால் வளைகுடா நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வருகிறது. அதே நேரத்தில் 2070ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கார்பன் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

மத்திய அரசு
அதே நேரத்தில் எண்ணைய் மற்றும் நிலக்கரிக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை இந்தியா தேடி வருகிறது. குறிப்பாக இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்தமான் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆழ்துளை பணிகளில் ஈடுபட்டு வந்தது. இதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்வகையில், அந்தமான் தீவுகளில் கிழக்கு கரையில் இயற்கை எரிவாயு வளம் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
அந்தமான் எரிவாயு
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," ஓ.என்.ஜி.சி. (ONGC) நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்கடலில் துளையிடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியின் பலனாக, அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 295 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ விஜயபுரம்" பகுதியில் உள்ள 2 ஆய்வுக் கிணறுகளில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கிணற்றில் 2,212 முதல் 2,250 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதியாகியுள்ளது.
ஹர்தீப் சிங் புரி
எடுக்கப்பட்ட மாதிரிகள் கப்பல் மூலம் காக்கிநாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டதில், அதில் 87% மீத்தேன் (Methane) இருப்பது கண்டறியப்பட்டது. வரும் மாதங்களில் இந்த எரிவாயு களத்தின் அளவு மற்றும் வணிக ரீதியான பயன்பாடு குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெறும் . இது அந்தமான் கடல் படுகையில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு, மியான்மர் முதல் இந்தோனேசியா வரை காணப்படும் எரிவாயு வளத்தின் தொடர்ச்சியாக இந்திய கடல் பகுதிகளிலும் இருப்பதை நிரூபிக்கிறது.
ஆழ்கடல் ஆய்வு
குடியரசு தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த "ஆழ்கடல் திட்டத்தின்" கீழ், இந்திய கடல்வழிப் பகுதிகளில் பல புதிய ஆய்வுக் கிணறுகள் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த புதிய கண்டுபிடிப்பு அந்த திட்டத்தின் ஒரு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, பெட்ரோப்ராஸ் (Petrobras), பிபி இந்தியா (BP India), ஷெல் (Shell), எக்சான் மொபில் (Exxon Mobil) போன்ற உலகின் முன்னணி ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்களுடன் இந்தியா இணைந்து பணியாற்றுவதற்கும் வழிவகுக்கும். இந்த கண்டுபிடிப்பு, இந்தியாவின் 'அம்ரித் கால்' பயணத்தில் ஒரு பெரிய மைல்கல் ஆக இருக்கும்" என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications