தக்காளியை விடுங்க.. இந்த பச்சை மிளகாய் கெட்ட கேடு என்னா விலை விக்குது!.. வேறு எதெல்லாம் விலை உயர்வு
சென்னை: தக்காளி விலையை காட்டிலும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயின் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் செய்வதறியாமல் விழிப்பிதுங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அது போல் துவரம் பருப்பின் விலையும் அதிகமாகவே உள்ளது. சிலிண்டர், பெட்ரோல் டீசல் உள்ளிட்டவைகளின் விலை அதிகமாகவே இருக்கிறது.

இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை கிலோ ரூ 100 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தக்காளி சாதத்தின் விலை அதிகரித்துள்ளது. பலர் தக்காளி இல்லாமல் எந்த உணவை செய்யலாம் என இன்டர்நெட்டில் தேடி வருகிறார்கள். இன்னும் சிலர் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், கொத்தமல்லி சாதம், புளி ரசத்தை சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.
சரி தக்காளியின் விலைதான் வரத்து இல்லாமல் அதிகரித்துள்ளது என பார்த்தால் இஞ்சி விலையும் அதிகரித்துவிட்டது. ஒரு கிலோ ரூ 300 க்கு விற்பனையானது. அது போல் வெங்காயத்தின் விலை ரூ 50 அதிகரித்து கிலோ 100 க்கு விற்பனையாகிறது. இந்த வெங்காயம் இதுவரை 4 கிலோ ரூ 100 க்கு விற்பனையானது.

அது போல் பச்சை மிளகாயின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடகாவில் மட்டுமே பச்சை மிளகாய் சீசன் உள்ளது.
இதனால் பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ 30க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 4 மடங்கு வரை விலை உயர்ந்து ரூ 400க்கு விற்கப்படுகிறது. இப்படி காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக அசைவத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications