ஆன்லைன் ரம்மி.. இன்னும் எத்தனை பேர் உயிர வாங்க போறாங்கனு தெரியல.. கண்ணீரில் வினோத்குமாரின் மனைவி!
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தற்கொலை செய்துகொண்ட வினோத் குமார் மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சென்னை: இன்னும் எத்தனை உயிர்களை வாங்க போகிறது ஆன்லைன் சூதாட்டம் என்று ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட வினோத் குமாரின் மனைவி கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார். பார்க்கும் லோன் ஆப்களில் எல்லாம் வினோத் குமார் கடன் பெற்றுள்ளதாக கூறிய அவர், என் கணவர் சாவே கடைசியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் சென்னையில் மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
இவர் பல லோன் ஆப்களில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்த லோன் ஆப்களில் இருந்து வந்த நெருக்கடி வந்துள்ளது.

தூக்கிட்டு தற்கொலை
அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வேதனையில் வினோத் குமார் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வினோத் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி தொடர்ந்து வினோத் குமாரை எச்சரித்து வந்தும், அதனை கேட்காமல் ஆன்லைன் ரம்மி ஆடி வந்துள்ளார்.

குழந்தைக்கு என்ன சொல்வேன்?
இந்த நிலையில் கணவர் வினோத் குமார் தற்கொலை தொடர்பாக அவரது மனைவி கூறுகையில், என் கணவர் மனதில் என்ன குழப்பினாரோ தெரியவில்லை. இந்த ரம்மி விளையாட்டால் ஊரை சுற்றி கடனாகிவிட்டது. இதில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. என் சாவே கடைசியாக இருக்க வேண்டும். தயவு செய்து தடை செய்ங்கடா என்று எழுதி வைத்துவிட்டு, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு உயிரிழந்துவிட்டார். என் குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்று தெரியாது. அப்பா எங்கே என்று கேட்டால் என்ன சொல்லுவேன்.

காசை பிடுங்கிய ரம்மி
6 மாதமாகவே ஆன்லைன் ரம்மி விளையாடுவது தெரியும். என்னிடம் மறைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி இருக்கிறார். அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. எங்களிடம் ரூ.20 லட்சம் கடன் என்று கூறியுள்ளார். ஆனால் எவ்வளவு கடன் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும். எல்லா லோன் ஆப்களிலும் கடன் வாங்கியுள்ளார். எல்லாம் இந்த ரம்மியால் தான். காசு இல்லையென்றால் விட்டுச் சென்றிருக்கலாம். காசு, காசு என்று பிடுங்கி ரம்மி, எல்லாத்தையும் எடுத்துக் கொண்டது. ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானதால், மருத்துவமனைக்கு கூட கூட்டிச் சென்றேன்.

கடனை அடைக்க மீண்டும் ரம்மி
ஆனால் என்னிடம் மறைத்து மறைத்து விளையாடியுள்ளார். கடன் வாங்கி, கடனை அடைக்க என்று மீண்டும் மீண்டும் ரம்மி விளையாடியுள்ளார். பார்க்கும் லோன் ஆப்களில் எல்லாம் கடன் பெற்றுள்ளார். கண்ணை மூடிக் கொண்டு கடன் கொடுத்துள்ளார்கள். குடும்ப சூழல் என்ன, கடனை திரும்பி கொடுக்க முடியுமா என்று எதுவும் தெரியாமல் கடன் கொடுத்துள்ளார்கள்.

எத்தனை உயிர்கள்?
அத்தனை புரூஃப் கேட்டுள்ளார்கள். உயிர் குடிக்க மட்டும் புரூஃப் இல்லையா.. என் பிள்ளை 2ம் வகுப்பு தான் படிக்கிறான். இனிமேல் யாரும் இதுபோல் தப்பு செய்யாதீர்கள். கடன் வாங்கி அடைக்க முடியாமல் தான் என் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த ரம்மி இன்னும் உயிரை வாங்கி கொண்டு தான் இருக்குமா? தூக்குபோடும் அளவுக்கு எப்படி தெம்பு வந்ததோ தெரியவில்லை. இன்னும் எத்தனை பேர் உயிர வாங்க போறாங்கனு தெரியல என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications