Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எய்ம்ஸ்க்கு ஒரே ஒரு செங்கல்.. 8 கோடி தமிழர்களை அவமானப்படுத்தும் மத்திய அரசு..கொந்தளித்த முதல்வர்

சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குகிறார்கள். சங்கத்தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவதா என்று மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு அதற்கு ஒரே ஒரு செங்கலை மட்டும் வைத்து விட்டு பல ஆண்டுகாலமாக தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து 8 கோடி தமிழர்களையும் மத்திய அரசு அவமானப்படுத்துவதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Only one brick for AIIMS Central government is humiliating 8 crore Tamils says MK Stalin

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல, இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதே முக்கியம். பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து விட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டி விட்டு இன்று வரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டை கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. மொத்தமே 12 கோடி ரூபாய் மட்டுமே மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது 8 கோடி தமிழ்நாட்டு காரியமல்லவா என்று கேட்டார் முதல்வர் ஸ்டாலின்.

Only one brick for AIIMS Central government is humiliating 8 crore Tamils says MK Stalin

8 கோடி தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிகளால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மத்திய அரசு அவமானப்படுத்துகிறது. சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கி விட்டு சங்கத்தமிழுக்கு வெறும் கையை நீட்டுவதால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து போயிருக்கின்றனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+