"அவர்கள்" பிரச்சினைக்குள் தலையிட அவசியம் இல்லை.. முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு
சென்னை: திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. ஆனால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மண்டபத்துக்கு வர தாமதமானது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. இதனால் அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அதிமுக பொதுக் குழுவை பற்றி பெயர் குறிப்பிடாமல் சில வார்த்தைகள் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Recommended Video
திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என தெரியும். அந்த பிரச்னைக்குச் செல்ல விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமுமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications