"சும்மாதான்".. என்ன இப்படி பண்ணிருச்சு இந்த பொண்ணு.. அதிர வைத்த பிரியதர்ஷினி!

ஊட்டி இளம்பெண் ஆடியோ வெளியிட்டு விளக்கம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சும்மாதான் சொன்னேன்.. காதலன் வந்து கூட்டிட்டு போவான்னு சொன்னது எல்லாமே பொய்.." என்று ஊட்டியில் தன் திருமணத்தை தானே நிறுத்திய மணப்பெண் விளக்கம் அளித்துள்ளார்... இவர் பேசியதாக ஒரு ஆடியோவும் இணையத்தில் வைராகி வருகிறது.

2 நாட்களாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. ஊட்டியை இளம்பெண் பிரியதர்ஷினி, மணமேடையில் உட்கார்ந்த பின்னரும், தன் காதலனுக்காக காத்திருந்தார்.

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்குமுன்புகூட, காதலன் நிச்சயம் வந்து தன்னை கூட்டிட்டு செல்வார், 1 மணிநேரம் காத்திருங்கள் என்று சொடுக்கு போட்டு சேலஞ்ச் செய்துவிட்டு என்று நம்பிக்கையுடன் காத்திருந்தவர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அதிர்ச்சி அடைந்து பெற்ற தாய் அவரை அடிக்க பாய்ந்தும் அசராமல் உறுதியுடன் நின்றவர்.. மாப்பிள்ளை அப்படியே மிரண்டு போய் உட்கார்ந்திருந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவனுக்காக என சபதம் போட்டு தமிழகத்தையே பரபரப்பாக்கினார்.

அமைதி

அமைதி

"கல்யாணத்தில் சம்மதமா" என்று 2 முறை கேட்கவும், 2 முறையும் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தார் பிரியதர்ஷினி.. 3வது முறை கேட்டபோதுதான், அந்த அனைவரையும் மிரண்டு ஓட வைக்கும் அந்த பதிலை சொன்னார். அதற்கு மாப்பிள்ளை அங்கிருந்து எழுந்து போய்விட்டார்.

 எது உண்மை?

எது உண்மை?

இதையடுத்து, பிரியதர்ஷனி வீட்டை விட்டு துரத்தப்பட்டு விட்டதாக ஒரு செய்தி வெளியானது.. காதலனை தேடி சென்னைக்கு கிளம்பி சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. இதில் எது உண்மை என்று தெரியாத நிலையில் அவரை பற்றி பல்வேறு தகவல்கள் சோஷியல் மீடியாவில் வெளிவந்து கொண்டே இருக்கிறது.. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிரியதர்ஷினியே தன்னிலை விளக்கம் தந்துள்ளதாக ஒரு ஆடியோ இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது... படுகர் சமுதாயம் என்பதால், பிரியதர்ஷினி படுகா மொழியிலேயே அதில் பேசியுள்ளார்.

விளக்கம்

விளக்கம்

"எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஆனந்த் மீது நிறைய கம்ப்ளைண்ட்கள் வந்தது.. தவறான தகவல்கள் வந்து கொண்டே இருக்கவும், எனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும் அவருடன் செல்வதாகவும் கூறி கல்யாணத்தை நிறுத்திவிட்டேன்.. அன்று நான் சொன்னது பொய்.. இப்போ என் அப்பா, அம்மாகூட நல்லாதான் இருக்கேன்" புதிய விளக்கம் அளித்துள்ளார். இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.

 கல்யாணம்

கல்யாணம்

ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில், கல்யாண ஏற்பாட்டின்போதே இதையெல்லாம் சொல்லி இருந்திருக்கலாமே, தேவையில்லாத அவமானம் மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல, பாவம் அந்த பெண்ணுக்கும்தானே என்ற முணுமுணுப்புகளும் எழுந்து வருகின்றன.. ஆனாலும் மாப்பிள்ளையின் நிலைமையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+