“உலகிற்கு 2025ல் இந்தியா அனுப்பிய தெளிவான மெசேஜ்” - ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பெருமிதம்
சென்னை: இந்தியாவின் ராணுவ வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாகவும், இந்திய ராணுவத்தின் துல்லியம் மற்றும் தேசிய உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நினைவு கூரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை அழித்த இந்தியா ஏராளமான பயங்கரவாதிகளைக் கொன்றது.

இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அத்துமீற முயன்ற பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. 4 நாட்கள் நடந்த இந்த மோதலில் இந்தியாவின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இதனையடுத்து, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் கருதப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஆண்டின் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு மிளிரும் சான்றாக உள்ளது. துல்லியம், தொழில்முறையுடன் இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பின் மையங்களை தாக்கி, தீர்க்கமான அடியை வழங்கி உள்ளது.
இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாது. அதை ஆதரிப்பவர்கள் முழு பலத்துடன் பழிவாங்கப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை உலக நாடுகளுக்கு இந்த நடவடிக்கை அனுப்பி உள்ளது. இந்தியாவின் ராணுவ வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாகவும், இந்திய ராணுவ துல்லியம் மற்றும் தேசிய உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் இந்த நடவடிக்கை நினைவு கூரப்படும்." என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications