ஆபரேஷன் திரிசூலம்.. 3 மாத ஆபரேஷனை கையில் எடுத்த எடப்பாடி.. திமுகவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்குறாரே?
சென்னை: திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒண்று கையில் எடுத்துள்ளாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை பிரித்து.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்க எடப்பாடி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரசை இழுக்க திட்டம்: கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை உள்ளே இழுக்கவும் எடப்பாடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

கூட்டணியில் குழப்பம்: இந்த நிலையில்தான் திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒண்று கையில் எடுத்துள்ளாராம். இதற்காக ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை எடப்பாடி கையில் எடுத்து இருக்கிறாராம்.
அதன்படி காங்கிரஸ் - திமுக கூட்டத்தை உடைக்க இந்த பிளான் எடுக்கப்பட்டு உள்ளதாம். 3 மாதங்களில்.. அதாவது பிப்ரவரிக்கு முன் கூட்டணியை முறிப்பதே இந்த இந்த ஆபரேஷன் திரிசூலம் என்கிறார்கள். திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை.
ஆனாலும் சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் ஒட்டியது, இணையத்தில் கார்த்தி சிதம்பரம் - உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே கூட இதனால் மோதல் ஏற்பட்டது. இணையத்தில் இவர்களுக்கு இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.
அதேபோல் நேற்று மாவீரர் தினத்தை முன்னிட்டு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்ட வீடியோவிற்கு கார்த்தி சிதம்பரம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தார். மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்தனர். இதெல்லாம் காங்கிரஸ் - திமுக இடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணி விரிசல்; குறிப்பாக, இந்த முறை 30 இடங்களில் திமுக போட்டியிட நினைக்கிறது. அதனால் காங்கிரஸ் 5 சீட்டுகளுக்கு அதிகபட்சம் 6 சீட்டுகள் ஒதுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். எடுத்தவுடனேயே 6 என்று சொல்ல வேண்டாம். 5-ல் ஆரம்பித்து 6-ல் முடிக்கலாம் என்பது ஸ்டாலினின் திட்டம்) சுருக்கலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
இந்த முறை 12 சீட்டினை எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறதாம். இந்த சீட் விவகாரம் காரணமாக இரண்டு கட்சிகளுக்கு இடையில் கண்டிப்பாக விரிசல் வரலாம் என்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்தே திமுக - காங்கிரஸ் உறவை 3 மாதங்களில் முறிக்கும் விதமாக ஆபரேஷன் திரிசூலத்தை எடப்பாடி கையில் எடுத்துள்ளாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications