சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச வாய்ப்பு..அதிமுக என்ற உடன் அமளி..வெளிநடப்பு
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறிய உடன் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும் அமளியில் ஈடுபட்டன. ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து சட்டசபையில் பேசினார்.
இந்த மசோதா மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., நாகை மாலி, பாஜக குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக குழுத்தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர்.

ஓ.பன்னீர் செல்வம்
இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா விவாதம் இன்றி ஏக மனதாக நிறைவேற வேண்டும் தான் விரும்புவதாக கூறினார். தொடர்ந்து அவர் அதிமுக சார்பில் இந்த மசோதாவை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அதுதான் எதிர்க்கட்சி,ஓ. பன்னீர் செல்வம் பேசுவது குழப்பத்தை உண்டு செய்வது போல் உள்ளது என்று தெரிவித்தார்.

அதிமுக உறுப்பினர்கள் அமளி
இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ நான் சொல்லவில்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் கோரும் போது ஓபிஎஸ்க்கு அனுமதி வழங்கினோம் என்று தெரிவித்தார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

வெளிநடப்பு
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில்தான் ஓபிஎஸ்க்கு அனுமதி வழங்கினேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications