தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? முதல்வர் சட்டம் ஒழுங்கை காக்கவில்லை! எடப்பாடி பழனிசாமி சாடல்!
சென்னை: தமிழகத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காக்க தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சர்புதின் என்ற இளைஞர் கொலை குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள டிவிட்டர் பதிவு வருமாறு;
''தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள்ளாக திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததற்காக சர்புதின் வெட்டிப் படுகொலை.
''சேலம் ஓமலூரில் அரசு ஊழியர்- விஏஓ வினோத்குமார் மீது கொலை முயற்சி என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள், தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற வேதனைக் கேள்வியை எழுப்புகிறது.''
''கமிஷனிலும் கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்த முதல்வர் காண்பிக்க தவறுவதை வன்மையாக கண்டிப்பதுடன், ரவுடிகள் அச்சமின்றி நடைபெறும் இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.''
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமி தனது பதிவில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications