டெல்டாவில் கால் வைக்க கூச்சப்படனும்.. ரீல்களை அளந்து விடும் ஸ்டாலின்! அனல் பறக்க எடப்பாடி அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சையில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரைவேக்கட்டுத்தனமான அரசியல் செய்வதாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும் வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறார் ஸ்டாலின் என்று பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தஞ்சைக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், மக்களின் வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி புலம்பி வருகிறார். உட்கட்சி கூட்டணி பிரச்சனையை மறக்கவே அரசியல் அறிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு வருகிறார். அவரது அறிக்கை அரைவேக்காட்டுத்தனமாக உள்ளன எனக் கூறியிருந்தார்.

edappadi Palaniswami mk Stalin aiadmk

இந்த நிலையில் திமுக ஆட்சியில் தவறுகளை சுட்டிக்காட்டும் தனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல என பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர்," திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் திரு.ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. "அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா திரு. ஸ்டாலின் அவர்களே?

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்! தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே- இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே?

மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப் படுத்தவில்லை! நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர்! "நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்" என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை!

நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்? எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா? ஆக, "ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்" என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+