Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனி அரசியல் களம் மீண்டும் கொதிக்க தொடங்கியுள்ளது..
போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் பரிசு அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பியுள்ளது.. பணம், வாக்கு, உள்ளூர் எதிர்ப்பு - இந்த மூன்று காரணிகள் தேர்தல் முடிவை மாற்றுமா என்ற கேள்வி எழுகிறது..!!

தேனி மாவட்டத்தின் அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த வகையில், தற்போது போடிநாயக்கனுார் தொகுதியில் அரங்கேறி வரும் காட்சிகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

Bodinayakkanur OPS O Panneerselvam DMK AIADMK Theni tamil nadu assembly Election 2026 Gold Prize Political Strategy Campaign Offer 2026 2026

அதிமுகவில் முதல்வர் நாற்காலி வரை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுக வேட்பாளராக அதே தொகுதியில் களம் காண்பது ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், அவர் அறிவித்துள்ள 'பரிசு மழை' அறிவிப்புகள் கள நிலவரத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன.

பரிசு மழையும் பதற்றமும்

மேல சொக்கநாதபுரம் மற்றும் சங்கராபுரம் பகுதிகளில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டங்களில், ஓ.பி.எஸ் மற்றும் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் இணைந்து அறிவித்துள்ள ஊக்கத்தொகை மற்றும் தங்கப் பதக்க அறிவிப்புகள் திமுகவினரை உற்சாகப்படுத்தியிருப்பதாகத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நெருக்கடி கவனிக்கத்தக்கது.

அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பூத் கமிட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய், அதிமுகவை விட கூடுதல் வாக்குகள் பெற்றால் கூடுதல் பரிசு, சிறப்பாகச் செயல்படும் செயலாளர்களுக்கு ஐந்து சவரன் தங்கப் பதக்கம் எனப் பண பலத்தை ஓ.பி.எஸ் முன்னிறுத்தியுள்ளார்.


ஓபிஎஸ் மாஸ் பிளான்

அதிமுக கோட்டையாகக் கருதப்படும் போடியில் மூன்று முறை வெற்றி பெற்ற ஒரு மூத்த தலைவர், இப்போது கட்சி மாறி வந்து நிர்வாகிகளை உற்சாகப்படுத்த இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாக அறிவிக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது என்ற கேள்வி எழுகிறது.

ஓ.பி.எஸ்ஸின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம், தொகுதியில் அவர் சந்தித்து வரும் கடும் அதிருப்திதான். பல ஆண்டுகளாக திமுகவிற்காக உழைத்த உள்ளூர் நிர்வாகிகள், திடீரென மாற்று முகாமில் இருந்து வந்த ஒருவருக்குத் தங்கள் வாய்ப்பு பறிபோனதை ஏற்கும் மனநிலையில் இல்லை. தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒருவருக்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உள்ளூர் திமுகவினரின் ஒத்துழைப்பு ஓ.பி.எஸ்ஸிற்கு சரிவரக் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை...!

பலவீனமான பிடிமானம்

அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதில் அதிமுக தலைமை மிக உறுதியாக உள்ளது. இவருக்குத் துணையாக நிற்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் ஓ.பி.எஸ்ஸிற்கும் இடையிலான பழைய பகையைத் தாண்டி, எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் தனக்கு அரசியல் போட்டியாக வந்துவிடுவார் என்ற கணக்கும் இதில் ஒளிந்துள்ளது. இதனால், வெளியே ஆதரவு தருவது போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் நிலவும் அதிகாரப் போட்டி ஓ.பி.எஸ்ஸை நிலைதடுமாறவே செய்துள்ளது.

வியூகம் பலன் தருமா

ஓ.பி.எஸ்ஸின் இந்த"'பண வியூகம்" தற்காலிகமாகத் தொண்டர்களை வேலை செய்யத் தூண்டலாம். ஆனால், ஒரு தொகுதியில் வெற்றி என்பது நிர்வாகிகளின் ஒத்துழைப்பைத் தாண்டி மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தது. அதிமுகவின் தீவிரமான தேர்தல் பணிகளையும், உள்ளூர் திமுகவினரின் அமைதியான
எதிர்ப்பையும் சமாளிக்க ஓ.பி.எஸ் கையிலெடுத்துள்ள இந்த ஆயுதம் எடுபடுமா என்பது சந்தேகம் தானாம்..!

காரணம் அதிமுக தன் முன்னாள் தலைவரைத் தோற்கடிக்க அனைத்துப் பலத்தையும் பிரயோகிக்கும் நிலையில், வெறும் பரிசு அறிவிப்புகளால் மட்டுமே அந்தப் பிம்பத்தை உடைத்துவிட முடியாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..!!

ஒர்க் அவுட் ஆகுமா

தற்சமயம் உள்ளூர் நிலவரப்படி ஓ.பி.எஸ் கடும் நெருக்கடியில் இருப்பது உறுதி என்றும், தேர்தல் களத்தில் பண பலம் ஒரு காரணியாக இருந்தாலும், மன பலமும் தொண்டர்களின் உண்மையான விசுவாசமுமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்..

எனவே, போடி தொகுதியில் ஓ.பி.எஸ்ஸின் இந்த "
ரிஸ்க் எடுக்கும் முயற்சி அவருக்கு வெற்றியைத் தருமா அல்லது அரசியலில் பெரும் சறுக்கலை ஏற்படுத்துமா தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+