எங்களைப்பழி வாங்குவதை கைவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்துங்கள் - ஈபிஎஸ் , ஓபிஎஸ் எச்சரிக்கை
சென்னை : "ஆதாரம் இன்றி ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது..... முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.." ஓபிஎஸ் & ஈபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நெருக்கமான இடங்கள் என மொத்தம் 52இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. இப்போது வேலுமணி வீட்டிலும் நடப்பதால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேண்டாம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்களைக் குறி வைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

வருத்தம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. S.P. வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒருசிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதா என்ற ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றன.

கண்டிக்கத்தக்கவை
துடிப்பான கழக செயல்வீரர் S.P. வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம். கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள்

உண்மை என்ன
அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும், முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.
Recommended Video

ஓபிஎஸ் இபிஎஸ்
இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று. அனைத்திந்திய அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும், அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும்" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கையில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications