தனிக் கட்சி அறிவிப்பு? பின்னணியில் இருக்கும் 2 காரணங்கள்.. மனோஜ் பாண்டியனால் முடிவை மாற்றிய ஓபிஎஸ்!
சென்னை: தனிக் கட்சி தொடங்கலாம் என்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முடிவிற்கு பின், இரு காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. மீண்டும் அதிமுகவுக்குள் இணைத்துக் கொள்ள வாய்ப்புகள் குறைவு என்பதால், சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தொண்டரள் உரிமை மீட்பு குழுவாக செயல்பட்டு கொண்டிருந்த அமைப்பு, இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் கூட்டணி குறித்த முடிவை எடுக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

அதில் டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் மீண்டும் நடக்கும். அதற்கு நல்ல முடிவை எடுக்காவிட்டால், நாங்கள் எடுக்கும் முடிவு அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும்.. திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க திண்டுக்கல்லில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்ட போது, என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது.. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறி இருந்தார். ஆனால் அடுத்த நாளிலேயே புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டிருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஓபிஎஸ் எடுத்துள்ள முடிவுக்கு பின் 2 காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதில் முதல் காரணம் என்னவென்றால் குழுவாகவோ அணியாகவோ இருந்தாலும், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியாது. ஏற்கனவே தங்களின் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு சென்றுவிட்டார்.
இந்த சட்டசபைத் தேர்தலில் தன்னுடன் இருப்பவர்களுக்கு போட்டி போடக் கூட வழிவகை செய்யாமல் இருந்தால், அது அரசியல் வாழ்க்கைக்கே பிரச்சனையாக முடிந்துவிடும் என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். மறுபுறம் ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இருக்கவே தொடக்கம் முதலே விரும்பி வருகிறார். அதிமுகவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிய வந்துவிட்டது.
இதனால் தனிக் கட்சியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அதிமுக தரப்பில் ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள் ஒதுக்கீடு மூலமாக சில தொகுதிகளை பெறலாம் என்று முடிவு செய்திருக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் ஓபிஎஸ் என்டிஏ அல்லது தவெக உடன் கூட்டணிக்கு செல்லலாம் என்று பார்க்கப்படுகிறது.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications