பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்.. அதிமுக அழுத்தி சொன்ன பாயிண்ட்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ பன்னீர் செல்வம் மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் இன்று அதிமுக தரப்பு பரபரப்பான வாதங்களை முன்வைத்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினையால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டியது. இந்த பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளாரக இருந்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதோடு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பும் வெளியானது. இதற்கிடையில், தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு: கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ரம், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து சிவில் வழக்கு தொடர்வதற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், சிவில் வழக்கை தொடரலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி , அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த மார்ச் 28ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தி வந்த நிலையில், கோடை விடுமுறை காரணமாக வழக்க்கு விசாரணையை ஜூன் 8 (இன்று) தள்ளி வைத்து உத்தரவிட்டது. அதன்படி, இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.
எடப்பாடி தரப்பு வாதம்: இந்த வழக்கில் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று அதிமுக, எடப்பாடி தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வைத்த வாதத்தில் கூறியதாவது:- கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது.கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது.
கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்பதல்ல. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்
பொதுக்குழுவுக்கு அதிகாரம்: ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தாக கூறினாலும் கூட, அவர்களை விட உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ.வாக செயல்படுவது மனுதாரர்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது விளக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓபிஎஸ் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும் எனத் தெரியவில்லை.
ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியில் 2500 பேர் கொண்ட பொதுக்குழு எப்படி ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டது. கட்சி செயல்பாடு முடங்கி விட்டது என்ற வாதம் கற்பானையானதல்ல; உச்ச நீதிமன்றமே அதை ஏற்றுக் கொண்டுள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை எனவும், கட்சி அடிப்படை விதிகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது .
கட்சி விதிகள் படியே திருத்தங்கள்: கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஓபி எஸ் எந்த உரிமையும் கோர முடியாது. ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலையே மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கட்சி விதிகளின்படியே, விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் எந்த தவறும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் தலைவராக, முதல்வராக இருந்திருக்கலாம். தலைவர்கள் வரலாம்; போகலாம். மக்களின் விருப்பப்படி தான் கட்சி தொடர வேண்டும் எனவும், அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன் கருதியே எடுக்கப்பட்டன.
நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப்பசி காரணமாகவே இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்" இவ்வாறு தனது வாதத்தை முன்வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் தலைமை வழக்கறிஞருமான விஜய் நாராயண் வாதங்களுக்காக வழக்கு நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications