மறுபடியும் துபாய்க்கே போலாமா? பனையூர் பக்கம் ஒதுங்கும் ஓபிஎஸ்? வேண்டாமென சொல்லும் மனசாட்சி! குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருப்பது, தற்போது அதிமுகவில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடையே ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பனையூர் கதவுகள் திறந்திருக்கும் நிலையில் பலரும் கட்சித் தாவலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் பக்கம் செல்லலாமா? அல்லது அதிமுக பக்கமே சொல்லலாமா? என பெரும் குழப்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இணைப்புக்கு பிறகு, அதிமுகவில் அதிருப்தியாக உள்ள சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கும் த.வெ.க. தரப்பில் வலைவீசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, அதிமுகவிலிருந்து வெளியேற நினைக்கும் தலைவர்களுக்கு புதிய திசையை காட்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்ய உள்ளார் என்ற கேள்வி மீண்டும் அரசியல்களத்தில் எழுந்துள்ளது.

o panneerselvam TVK Sengottaiyan

அதிமுக நெருக்கடி

அவர் தலைமையில் செயல்படும் அணியின் நிர்வாகிகளிடம் பேசியபோது, " அதிமுகவுக்கு திரும்பலாமா? அல்லது த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாமா? என்ற இரு விருப்பங்களும் தற்போது பரிசீலனையில் உள்ளன. குறிப்பாக, செங்கோட்டையன் த.வெ.க.வில் சேர்ந்தது, பன்னீர்செல்வத்தின் அணிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்ற, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஓபிஎஸ் குழப்பம்

அதில், கூட்டணி விஷயத்தில் ஆதரவாளர்களிடம் பன்னீர்செல்வம் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமான கருத்துகளையும், பரிந்துரைகளையும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, அவரின் அடுத்த கட்ட அரசியல் முடிவுக்கு முக்கிய சமிக்ஞையாக கருதப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் பேசுகையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், "ஒரு மாதத்திற்குள் அ.தி.மு.க. ஒன்றிணைப்பு நடைபெறவில்லை என்றால், புதிய வியூகம் வகுத்து தனித்த கட்சி போல செயல்பட வேண்டிய சூழல் உருவாகலாம்," என்று தெளிவாக கருத்து தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

ஓபிஎஸ் அணி

இந்த கூற்று, ஓபிஎஸ் அணியினரின் மனநிலையை வெளிப்படுத்துவதாகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு பற்றிய நம்பிக்கை மங்கி வருவதையும் காட்டுகிறது. இதனுடன், கூட்டணி குறித்து மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனையும் ஓபிஎஸ் கேட்டுள்ளார். அரசியல் முடிவுகளுக்கு முன் முக்கிய தலைவர்களின் கருத்தை கேட்கும் பன்னீர்செல்வத்தின் பழைய நடைமுறை இதுவும் எனக் கூறப்படுகிறது.

விஜய் கட்சி

ஒருபுறம் அ.தி.மு.க.க்கு திரும்ப ஒன்று மாத 'டெட்லைன்' வைத்துள்ள நிலையில், மறுபுறம் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு ஓபிஎஸ் அணியில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. த.வெ.க. வளர்ச்சியடைந்து வரும் சூழலில்,ஓபிஎஸ் அணிக்கு அது ஒரு எதிர்கால வாயிலாக அமையுமா என்ற ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 15ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலர்கள் கூட்டத்தை மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அன்றைய கூட்டத்திலேயே ஓபிஎஸ் தனது அணியின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றிய இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+