ஒபிஎஸ் மகனை வெற்றி பெற செய்ய வாக்கு எந்திரங்களை மாற்ற முயற்சி.. திமுக பகீர்!
சென்னை: தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்ததில் சதித்திட்டம் இருப்பதாக திமுகவின் ஆர்எஸ் பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இந்நிலையில் திமுகவின் ஆர்எஸ் பாரதி தமிழக தலைமை அதிகாரியான சத்தியபிரதா சாஹுவை சென்னையில் இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதிமுக முயற்சி
அவர் பேசியதாவது, கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டதில் சந்தேகம் உள்ளது. தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற அதிமுக முயற்சி செய்கிறது.

மகனை ஜெயிக்க வைக்க
தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றவே வாரணாசியில் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்ததாக சந்தேகம் உள்ளது. தனது மகனை வெற்றி வெற்றி பெற செய்யவே ஓபிஎஸ் வாக்கு எந்திரங்களை மாற்றிருக்கிறார்.

சதி நடந்துள்ளது
வாக்கு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெளிவான பதில் இல்லை. ஆகையால் இதில் ஏதோ சதி நடந்துள்ளது. இவ்வாறு ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

டிஜிபி விளக்கம்
இதனிடையே ஆர் எஸ் பாரதியின் கருத்துக்கு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது என்றும் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications