சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் நிபந்தனை ஏற்பு - அதிமுகவை வழி நடத்த 11 பேர் கொண்ட குழு அமைப்பு

அதிமுகவை வழி நடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் நிபந்தனையை ஏற்று அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அஇஅதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இந்த வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

OPS Conditional Acceptance An 11-member team structure to lead in ADMK

முன்னதாக கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள பெயர்களை முதல்வரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இந்த வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

1. திண்டுக்கல் சீனிவாசன்
2. தங்கமணி
3. எஸ்.பி.வேலுமணி
4. ஜெயக்குமார்
5. சி.வி.சண்முகம்
6. காமராஜ்
7. ஜே.சி.டி.பிரபாகர்
8. மனோஜ் பாண்டியன்
9. பா.மோகன்
10. கோபாலகிருஷ்ணன்
11. மாணிக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 7 ரொம்ப ராசியான நம்பர் - எண் கணித நிபுணர் கணிப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 7 ரொம்ப ராசியான நம்பர் - எண் கணித நிபுணர் கணிப்பு

அதிமுக முதல்வர் வேட்பாளர், கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை அறிவித்ததன் மூலம் அதிமுக 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் வரலாற்றில் இன்றைய தினம் முக்கியமான நாளாக அமைந்துள்ளது.

English summary
Chief Minister Edappadi Palanichamy has announced that an 11-member steering committee has been set up to guide the AIADMK. Ministers and key party executives are on the steering committee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X