மசியாத ஓபிஎஸ்! எடப்பாடிக்கு பறந்த பழனிச்சாமி?.. 3ஆவது நாளாக பரபரக்கும் ஆலோசனை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதிமுகவில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் வரை ட்விஸ்ட்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் போல!. நேற்று முன் தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது முதல் இன்று வரை நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக எடப்பாடி தரப்பை சேர்ந்த ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ் தரப்பு
ஆனால் இந்த தகவலை ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கம் மறுத்துள்ளார். அப்படி ஒரு விவாதமே நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தவுடன் ஓபிஎஸ் வீட்டில் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி
அது போல் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் ஓ பன்னீர் செல்வம் வீட்டிலும் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்னை உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதை எடப்பாடி தரப்பினர் கிழித்தெறிந்ததாக கூறப்படுகிறது.

மூன்றாவது நாள்
இந்த நிலையில் இன்றைய தினம் மூன்றாவது நாளாக ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெறுகிறது. ஒற்றைத் தலைமை குறித்தா என்பது தெரியவில்லை. ஆனால் அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசனைகள்
அது போல் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக் குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடினால்தானே அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவர், அது கூடாமல் இருக்க நீதிமன்றத்தில் தடை வாங்கினால் என்ன என்பது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

வெறிச்!
ஆனால் இதை ஓபிஎஸ் தரப்பினர் மறுத்துள்ளனர். பொதுக் குழுவுக்கு தடை வாங்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். அதிமுகவில் இத்தனை பரபரப்புகள் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ சேலம் சென்றுவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் வீடு தொண்டர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
-
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்?












Click it and Unblock the Notifications