30 நிமிடங்கள்.. மிக உன்னிப்பாக கேட்ட மோடி.. பிரதமருடனான மீட்டிங்கில் நடந்தது என்ன?.. பரபர தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொண்டர்கள் எதிர்க்கும் இரட்டை தலைமை, சசிகலா விவகாரம், வரிசையாக தி.மு.க.வுக்கு படையெடுக்கும் தலைவர்கள் என்று அ.தி,மு,க தலைமையே பரபரத்து காணப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வை கைப்பற்ற வெகுண்டெழுந்த சசிகலா பின்பு அமைதியானார்.

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வெளிப்படையாக அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை சந்தித்ததும் மனது மாறி மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார் சசிகலா.

 சசிகலா அதிரடி

சசிகலா அதிரடி

அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்புடன் தொண்டர்களின் ஆதரவை சசிகலா திரட்டி வருகிறார். கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா பேசி வரும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூடிய விரைவில் அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாகவும், தொண்டர்களை நேரடியாக சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 ஊழல் குற்றச்சாட்டுகள்

ஊழல் குற்றச்சாட்டுகள்

இது ஒருபுறம் பிரச்சினை என்றால் அ.தி.மு.க.வில் இருந்து பலர் தி.மு.க.வை நோக்கி படையெடுப்பதும் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அண்ட் கோ-வுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளை தூசிதட்ட முடிவு செய்துள்ளார் முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின். இதுவும் ஒருபுறம் அ.தி.மு.க.வுக்கு பீதியை கிளப்பி உள்ளது.

மோடியுடன் சந்திப்பு

மோடியுடன் சந்திப்பு

இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேசியதாக இருவரும் நிருபர்களிடம் கூறியுள்ளனர். தி.மு.க ஆட்சி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் ஆணித்தரமாக கூறினார் இ.பி.எஸ். ஆனால் இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் பிரதமரிடம் சசிகலா விவகாரம், தி.மு.க ஆட்சி குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    3 மாதங்களில் Chennai-ல் நிகழ்ந்த மாற்றம்.. சாதித்து காட்டிய Gagandeep Sigh Bedi
    சசிகலா விவகாரம்

    சசிகலா விவகாரம்

    சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலே நடந்த இந்த சந்திப்பில் அ.தி.மு.க.வை கைப்பற்ற துடித்து வரும் சசிகலாவின் நடவடிக்கை குறித்தே அதிகம் பேசப்பட்டுள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், தி.மு.க. வின் ஆட்சி, முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தி.மு.க அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவிர தி.மு.க-பா.ம. நெருக்கம் குறித்தும் இருவரும் பிரதமரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+