சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் ஓபிஎஸ் 2-வது நாளாக ஆலோசனை- தொண்டர்களின் வருங்கால முதல்வர் கோஷத்தால் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க கோரி வரும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று 2-வது நாளாக தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை தம்மை இப்போதே அறிவிக்க வேண்டு என்பது ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

துணை முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமாவா? காரில் தேசிய கொடி அகற்றமாம்!! துணை முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமாவா? காரில் தேசிய கொடி அகற்றமாம்!!

ஓபிஎஸ் ராஜினாமாவா?

ஓபிஎஸ் ராஜினாமாவா?

இதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருந்துவருகிறார். அத்துடன் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவிலும் ஓபிஎஸ் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இன்றும் ஆலோசனை

இன்றும் ஆலோசனை

இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் 2-வது நாளாக தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

நத்தம் விஸ்வநாதன் பங்கேற்பு

நத்தம் விஸ்வநாதன் பங்கேற்பு

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு போய்விட்ட நத்தம் விஸ்வநாதன் இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். இதனிடையே ஓபிஎஸ் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர்.

ஆதரவாளர்கள் கோஷம்

ஆதரவாளர்கள் கோஷம்

அவர்கள், அம்மாவின் வாரிசே! வருங்கால முதல்வரே என மீடியா கேமராக்கள் முன் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

English summary
Deputy Chief Minsiter O Panneerselvam hold discussion with his Supporters for 2nd day in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X