அமித்ஷா வருகைக்காக காத்திருக்கும் ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிசாமியை ஒப்புக்கொள்ள வைக்குமா பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா எடுக்கும் முடிவுக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காத்திருப்பது தெரிய வந்துள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி தனது அரசியல் வாழ்க்கையில் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த ஆலோசனை கூட்டத்தை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தன்னுடன் இருக்கும் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் ஓபிஎஸ் இருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை போல் இம்முறை என்டிஏ கூட்டணியிலும் இடம்பெறவில்லை. அதிமுகவுடனும் இணைய முடியவில்லை. ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் சாய்ந்துவிட்டார்.

OPS Meeting

அடுத்ததாக வைத்திலிங்கம் தவெக பக்கம் செல்ல உள்ளதாக கூறுகின்றனர். இதனால் ஓபிஎஸ் புதிய கூட்டணியில் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விஜய் தரப்பை ஒரு வாய்ப்பாக கருதினாலும், அவரின் முதல் எண்ணம் என்டிஏ கூட்டணியாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே அண்ணாமலையை சந்தித்த பின், உடனடியாக அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணித்தார்.

அந்த சந்திப்பில் அமித்ஷா தரப்பில், தனிக் கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிடுங்கள் என்று அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஓபிஎஸ்ஸை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடந்து வருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடக்கவிருந்த அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக டிசம்பர் 23ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதன் மூலமாக அமித்ஷாவின் தமிழ்நாடு பயணத்திற்காக ஓபிஎஸ் காத்திருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது. நாளை அமித்ஷா தமிழ்நாடு வருவதாக சொல்லப்படும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக திட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் டிசம்பர் 19ஆம் தேதியிலோ அல்லது அதன்பிறகோ அமித்ஷா தமிழ்நாடு வரலாம். அப்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை என்டிஏ கூட்டணியில் இணைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை என்டிஏ கூட்டணியில் இடம்பெறவில்லை என்றால், ஓபிஎஸ் தரப்பு விஜய்யுடன் கைகோர்க்க அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+